அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் இருந்து புகலிடக் கோரிக்கையாளர்கள் தப்பியோட்டம்

Read Time:1 Minute, 45 Second

australien1மனூஸ் தீவில் உள்ள சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து வைக்கும் முகாமில் இருந்து சுமார் 35 பேர் தப்பிச்சென்றுள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 35 புகலிடக்கோரிக்கையாளர்கள் பாதுகாப்பு வேலியை வெட்டி தப்பிச் சென்றபோதிலும் உடனடியாக அவர்களை மீண்டும் கைது செய்து தடுப்பு முகாமிற்கு அனுப்பி வைத்தாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்

இவர்களில் சிலர் காயமடைந்துள்ளதால் அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுகின்றது.

அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய முற்படும் சட்டவிரோத குடியேற்றவாசிகளை தடுத்து வைக்கும் நோக்கில் மனூஸ் தீவில் அமைக்கப்பட்ட தடுப்புமுகாமிலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்த முகாமினதும் நவ்று தீவில் உள்ள முகாமினதும் நிலமை குறித்து ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட மனித உரிமை நிறுவனங்கள் விமர்சனங்களை தெரிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை புகலிடக் கோரிக்கையாளர்கள் முகாம் பணியாளர்கள் சிலர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பேஸ்புக் பாவனையின் போது அவதானம் தேவை -பொலிஸ்
Next post வடமாகாண சபையின் இலச்சினையை பயன்படுத்தி மோசடி