சென்னை விமான நிலையத்தில், மோசடி வழக்கில் தேடப்பட்ட மலேசிய பெண் பிடிபட்டார்

Read Time:1 Minute, 15 Second

arrest-womanசென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை மலேசியாவிற்கு விமானம் புறப்பட்டு செல்ல தயாராக இருந்தது. இதில் மலேசிய நாட்டை சேர்ந்த பெண் தொழில் அதிபர் புஷ்பம் (வயது 51) என்பவர் ஏற வந்தார்.

அவரது பாஸ்போர்ட்டை குடியுரிமை அதிகாரிகள் சோதனை போட்டனர். அப்போது புஷ்பம் மீது ஐதராபாத் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து இருப்பதை கண்டுபிடித்தனர்.

மேலும் இந்த வழக்கில் புஷ்பத்தை போலீசார் தேடி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அவரது விமான பயணத்தை அதிகாரிகள் ரத்து செய்தனர். பின்னர் புஷ்பத்தை தனி அறையில் அடைத்து ஐதராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

ஐதராபாத்தில் இருந்து போலீசார் சென்னை வந்து புஷ்பத்தை அழைத்து செல்வார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரு மாத குழந்தையின் உயிரை பறித்த தாய்ப் பால்-
Next post (PHOTOS) ஜிம்னாஸ்டிக் வீராங்கனையை திருமணமே செய்து விட்டாரா புடின்…?