பொலிஸ் பாதுகாப்புடன் இடம்பெற்ற, மீரா ஜஸ்மின் திருமணம்

Read Time:2 Minute, 23 Second

meera_jasminemarrage_003பிரபல நடிகை மீரா ஜஸ்மினுக்கும், திருவனந்தபுரத்தை சேர்ந்த அனில் ஜான் டைட்டசுக்கும் திருமணம் செய்ய பெற்றோர்கள் நிச்சயித்தனர்.

கடந்த 9ஆம் திகதி கொச்சியிலுள்ள மீரா ஜஸ்மினின் வீட்டில் இருவருக்கும் பதிவாளர் முன்னிலையில் திருமணம் பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து திருவனந்தபுரத்தில் உள்ள எல்.எம்.எஸ். தேவாலயத்தில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், கேரள உயர் நீதிமன்றத்தில் அனில் ஜான் நேற்று பரபரப்பான மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த நானும், பெங்களூரை சேர்ந்த இந்து மத பெண்ணும் திருப்பதியில் மாலை மாற்றிக் கொண்டோம்.

ஆனால், அது சட்டப்படி நடந்த திருமணமல்ல. பின்னர், அந்த பெண்ணிடம் இருந்து விவாகரத்து கோரி பெங்களூர் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.

ஆனால், அந்த திருமணம் செல்லாது என்று நீதிமன்றம் எனது மனுவை தள்ளுபடி செய்தது. நடிகை மீரா ஜஸ்மினுடன் எனக்கு திருமணம் நடக்க உள்ளதை அறிந்த அந்த பெண், திருமணத்தை தடுத்து நிறுத்த போவதாக கூறி மிரட்டி வருகிறார்.

எனவே, எனது திருமணத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இதையடுத்து, திருமணத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, திருவனந்தபுரம் பாளையத்திலுள்ள எல்.எம்.எஸ். தேவாலயத்தில் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் மீரா ஜாஸ்மின், அனில் ஜான் டைட்டஸ் திருமணம் நேற்று நடந்தது.

இதில், நடிகர்கள் ஜெயராம், திலீப், நடிகை காவ்யா மாதவன்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலிகளின் யோகி இராணுவத்திடம் சரணடைந்ததாக மனைவி சாட்சியம்
Next post புறக்​கோட்டையில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு; மூவர் கைது