புலிகளின் யோகி இராணுவத்திடம் சரணடைந்ததாக மனைவி சாட்சியம்

Read Time:2 Minute, 56 Second

ltte.yogi'swifeமுள்ளிவாய்க்காலில் கடந்த 2009 ஆம் ஆண்டு புலிகளின் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவரான யோகரத்தினம் யோகி இராணுவத்தினரிடம் சரணடைந்ததாக அவரது மனைவியினால் இன்று ஆணைக்குழுவிடம் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.

கத்தோலிக்க மதகுரு பிரான்ஸிஸ் ஜோசப் முன்னிலையில் இராணுவத்தினரிடம் தனது கணவன் உட்பட பல போராளிகள் சரணடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சரணடைந்த எனது கணவன் உட்பட்ட நூற்றுக்கும் அதிகமானவர்களை இராணுவத்தினர் பேருந்து ஒன்றில் ஏற்றிச் சென்றதை நேரடியாகப் பார்த்தோம்.

இன்று வரையில் அவர்கள் தொடர்பிலான எந்தத் தகவலும் இல்லை என்றும் விடுதலைப்புலிகளின் சமராய்வு மையப் பொறுப்பாளர் யோகரத்தினம் யோகியின் மனைவி சாட்சியம் அளித்துள்ளார்.

இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியமளிப்பில் பங்குகொண்டு தனது முறைப்பாட்டினை பதிவு செய்யும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றிருந்தோம். மே மாதம் 18ஆம் திகதி இராணுவத்தினரிடம் சரணடையவுள்ளதாக எனது கணவர் யோகரத்தினம் யோகி என்னிடம் தெரிவித்துள்ளார்.

கடவுளால் அனுப்பட்ட கத்தோலிக்க மதகுரு பிரான்ஸிஸ் ஜோசப் அடிகளாருடன் எனது கணவர் உட்பட நூற்றுக்கும் அதிகமானவர்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தனர். அவர்களை இராணுவத்தினர் பேருந்து ஒன்றில் ஏற்றிச் சென்றதை நேரடியாகப் பார்த்தோம். இதுவரையில் அவர்கள் தொடர்பில் எந்தத் தகவலும் இல்லை.

11,676 பேர் இறுதிப் போரில் சரணடைந்ததாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. அவர்களில் எனது கணவரும் ஒருவர் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.

நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையிலும் இது தொடர்பில் முறையிட்டும் இன்று வரையில், எனது கணவன் தொடர்பில் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றும், அவரை விடுதலை செய்யவேண்டும் என்றும் யோகரத்தினம் யோகியின் மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாமா அஸ்மியுடன் நெருங்கிய பாதாள உலகத் தலைவர் கைது
Next post பொலிஸ் பாதுகாப்புடன் இடம்பெற்ற, மீரா ஜஸ்மின் திருமணம்