சீனாவில் டி.வி. நிகழ்ச்சியில் பங்கேற்க குழந்தையை விற்ற தந்தை: 5 ஆண்டு ஜெயில்

Read Time:1 Minute, 26 Second

arrest-boyசீனாவில் உள்ள குயிஷ்{ஹ மாகாணத்தை சேர்ந்தவர் ஷோயூ. இவர் அங்குள்ள ஒரு தனியார் டி.வி. நடத்திய இசை போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பினார். அதன் மூலம் பெரிய பாடகராக திட்டமிட்டார்.

இசை நிகழ்ச்சியில் பங்கேற்க குறிப்பிட்ட அளவு பணம் டெபாசிட் தொகையாக கட்ட வேண்டி இருந்தது. அதற்காக தான் பெற்ற 4 மாத ஆண் குழந்தையை 1 லட்சம் ரூபாய்க்கு கடத்தல் காரர்களிடம் விற்றார். இச்சம்பவம் கடந்த ஆண்டு நடந்தது.

ஆனால் தனது மகன் கடத்தப்பட்டதாக நாடகம் ஆடினார். ஒரு கட்டத்தில் அவன் தனது கணவரால் விற்கப்பட்டான் என்ற தகவல் மனைவிக்கு தெரிய வந்தது.

எனவே இது குறித்து போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி ஷோயூவை கைது செய்தனர். அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த கோர்ட்டு ஷோயூக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்கா – ரஷ்யாவுக்கு எதிராக குற்றச்சாட்டு
Next post 11 மாத பச்சிளம் பாலகியை கடித்து குதறிக் கொன்ற நாய்