அமெரிக்கா – ரஷ்யாவுக்கு எதிராக குற்றச்சாட்டு

Read Time:2 Minute, 45 Second

syriaசிரயாவில் கடந்த 10 மாதங்களாக இடம்பெற்று வரும் யுத்த நிலைமையை முடிவிற்கு கொண்டு வருவதற்கு ஏற்ற வகையில் லெபனானிய அரசாங்கம் உதவ முன்வந்துள்ளது. இதற்கு ஏற்ற வகையில் லெபனான் பிரதமர் ரமாம் சலம் நேற்று நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.

புதிதாக தெரிவாகியுள்ள 24 உறுப்பினர்களைக் கொண்ட லெபனான் அரச நிர்வாகம், சிரிய யுத்தத்திற்கு எதிர்ப்பை தெரிவித்து வரும் பலம் வாய்ந்த முன்னாள் சிரிய பிரதமர் சாட் ஹரிரியின் ஷிற்றி அமைப்புடன் இணைந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவின் அயல்நாடான லெபனானின் ஜனாதிபதி, நாடாளுமன்ற சபாநாயகர், அமைச்சரவை என்பனவும் பிரதமரின் இந்த திட்டத்திற்கு ஆதரவினை வழங்க முன் வந்துள்ளது.

அதேவேளை, சிரியாவில் கடந்த மூன்று வருடங்களாக நிலவும் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் அதனை அடுத்து ஏற்பட்டுள்ள மோதல் சமபவங்கள் காரணமாக லெபனானில் பிரிவினை வாதம் தோன்றியுள்ளன.

இதன் காரணமாக தற்கொலை குண்டுத் தாக்குதல் மற்றும் கார் குண்டுத் தாக்குதல்கள் காரணமாக சிரியா மற்றும் லெபனான் எல்லைப் பிராந்தியத்தில் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், எதிர்வரும் ஏப்பிரல் மாதம் உறுதியான அமைச்சரவை ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் சிரிய மோதல் காரணமாக லெபனான் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகாது என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதேவேளை, அமெரிக்காவின் முயற்சியுடன் சிரியா தொடர்பான பேச்சுவார்த்தைகள் அதிக அளவிலான முன்னேற்றம் இன்றி நேற்று நிறைவடைந்துள்ளது.

இருப்பினும், பேச்சு வார்த்தைகளை தொடர்வதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் தமது இணக்கப்பாட்டை வெளியிட்டுள்ளனர்.

பேச்சுவார்த்தைகளில் பின்னடைவு ஏற்பட்டதற்கு ரஷ்யாவே காரணம் என அமெரிக்க ஒபாமா நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post +1 மாணவனை காரை ஓட்டவிட்டு அழகு பார்த்த பெற்றோர்: விபத்தில் குடும்பமே பலி
Next post சீனாவில் டி.வி. நிகழ்ச்சியில் பங்கேற்க குழந்தையை விற்ற தந்தை: 5 ஆண்டு ஜெயில்