திருப்பூரில் 12 வயது மகளை பலாத்காரம் செய்த காமக்கொடூர தந்தை

Read Time:2 Minute, 35 Second

rape.girl_repeகோவை: திருப்பூரில் மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணி(53). ஆட்டோ டிரைவர். அவரது மனைவி ஆரோக்யமேரி. அவர்களுக்கு 12 வயதில் ஒரு மகளும், 10 வயதில் 2 மகன்களும் உள்ளனர்.

ஆரோக்ய மேரி கடந்த 2010ம் ஆண்டு உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார். இதையடுத்து பாலசுப்ரமணி தனது குழந்தைகளை திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் உள்ள குழந்தைகள் பசுமை பூங்காவில் சேர்த்தார். காப்பகத்திற்கு அடிக்கடி சென்று அவர் குழந்தைகளை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காப்பகத்திற்கு சென்ற அவர் மேலாளரிடம் மகளுக்கு மொட்டை போட வேண்டி இருப்பதால் சிறுமியை பழனிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து அவர் மகளை காப்பகத்தில் இருந்து அழைத்துச் சென்றார். பழனிக்கு செல்லும் முன்பு புத்தாடை வாங்கித் தருகிறேன் என்று கூறி பாலசுப்ரமணி தனது மகளை திருப்பூர் காதர்பேட்டை பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி தந்தையிடம் இருந்து தப்பித்து காப்பகத்திற்கு வந்துவிட்டார். காப்பகத்திற்கு வந்தபோதிலும் அவர் யாருடனும் பேசாமல் அழுது கொண்டே இருந்துள்ளார், இது குறித்து காப்பகத்தின் மேலாளர் கேட்டபோது தான் சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவம் பற்றி வழக்குப் பதிவு செய்த போலீசார் பாலசுப்ரமணியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தலைமை பொலிஸ் பரிசோதகரின் சடலம் மீட்பு
Next post +1 மாணவனை காரை ஓட்டவிட்டு அழகு பார்த்த பெற்றோர்: விபத்தில் குடும்பமே பலி