குளிர்கால ஒலிம்பிக் போட்டி: தலைக்கவசத்தில் தொலைபேசி இலக்கத்தைப் பொறித்து, காதலி தேடிய வீரர்

Read Time:2 Minute, 5 Second

4262_newsthumb_russia300ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றிய வீரர் ஒருவர் தனது தலைக்கவசத்தில் செல்லிடத் தொலைபேசி இலக்கத்தை எழுதி, தன்னை காதலிக்கும் பெண்கள்  தொடர்பு கொள்ளக் கோரி பரபரப்பை ஏற்படுத்தினார்.

ரஷ்ய வீரரான அலெக்ஷி சொபொலேவ் எனும் இவ்வீரரே இந்நடவடிக்கையை மேற்கொண்டார்.


22 வயதான அலெக்ஷி சொபொலேவ் ‘ஸ்னோபோர்டிங்’ விளையாட்டு வீரராவார்.

கடந்த சனிக்கிழமை ஒலிம்பிக் தகுதிகான் போட்டியில் பங்குபற்றிய போதே அவரின் தலைக்கவசத்தில் தொலைபேசி இலக்கம் பொறிக்கப்பட்டிருந்தது.

ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியிருப்பது அலுப்பூட்டுவதாகும் எனக் கூறிய அலெக்ஷி சொபொலேவ், தலைக்கவசத்தில் தனது செல்லிடத் தொலைபேசி இலக்கத்தை பொறிப்பதன் மூலம் காதலி ஒருவரை தேடிக்ககொள்ள உதவும் எனக் கருதுவதாக பின்னர் தெரிவித்தார்.

இந்நடவடிக்கைக்கு அவருக்கு பலனும் கிடைத்தது.  2000 இற்கும் அதிகமான பெண்கள் சொபொலேவின் தொலைபேசி இலக்ககத்துடன் தொடர்பு கொண்டனர். 

ஏராளமான புகைப்படங்களும் குறுஞ்செய்திகளும் ரசிகைகளிடமிருந்து கிடைத்தன.

ஆனால், அரையிறுதிப் போட்டியின்போது, அலெக்ஷி சொபொலேவ் மீண்டும் தொலைபேசி இலக்கத்தை காட்சிப்படுத்த அனுமதிக்கப்படவில்லை.

அரையிறுதிப் போட்டியின்போது அவரின் தலைக்கவசத்தில் மேற்படி இலக்கங்கள் மறைக்கப்பட்டிருந்தன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜெ. பிறந்த நாள்: மண்சோறு சாப்பிட்ட அதிமுக தொண்டர்கள்!
Next post என்னை அருகில் இருந்து கவனிக்க, நளினி பரோலில் வரத்தேவையில்லை: தந்தை பரபரப்பு பேட்டி