பேஸ்புக்கில் இணைந்ததால் பெண் கல்லால் அடித்துகொலை: சிரியாவில் சம்பவம்

Read Time:1 Minute, 54 Second

01Syrian-girl-stoned-to-deathபேஸ்புக் கணக்கை ஆரம்பித்த பெண ஒருவருக்கு சிரியா நீதிமன்றம் மரணதண்டனை வழங்கியதையடுத்து அப்பெண்ணை கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்றிய ஒரு சம்பவத்தால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிரியா நாட்டில் பெண்கள் பேஸ்புக் கணக்கை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் இணையதளத்தால் முறையற்ற பாலியல் குற்றங்கள் பெருகிவருவதாக குற்றம் சாட்டப்பட்டு இந்த நடைமுறை அங்கு கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் சிரியாவின் ராக்கா சிட்டி என்னும் நகரை சேர்ந்த ஒரு இஸ்லாமிய பெண் அல் ஜஸ்ஸிம் என்பவர் ஃபேஸ்புக்கில் புதியதாக ஒரு கணக்கை தொடங்கினார்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் அவர் மீது குற்றம் சுமத்திய இஸ்லாமியர்கள் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி இந்த வழக்கை விசாரணை செய்து அவருக்கு மரண தண்டனை விதித்தார்.

இதையடுத்து அவரை பொதுமக்கள் முன்னிலையில் கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்த சம்பவம் காரணமாக சிரிய நாட்டு பெண்களிடையே கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் ஃபேஸ்புக்கில் கோடிக்கணக்கான பெண்கள் கணக்கை வைத்துள்ளனர் ஆனால் சிரியாவில் மாத்திரம் இம்மாதிரியான சட்டம் உள்ளதை பல நாடுகள் கண்டனம் செய்து வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆபாச படத்தில் நடித்த பிக்கு கைது!
Next post ஜெ. பிறந்த நாள்: மண்சோறு சாப்பிட்ட அதிமுக தொண்டர்கள்!