பேஸ்புக்கில் மூன்றாவது பாலின தேர்வு அறிமுகம்

Read Time:1 Minute, 19 Second

facebook1பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் ஆண், பெண் மட்டுமல்லாது திருநங்கைகளும் இணையும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆண், பெண் ஆகிய பாலினங்களை அடுத்து சுமார் 50 பாலினத் தேர்வுகள் இணைக்கப்பட்டுள்ளன.

மூன்றாவது பாலினமாகக் கருதப்படும் திருநங்கைகள் சமுதாயத்தின் பல்வேறு தளங்களிலும் பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். உரிமைகளும் மறுக்கப்படுகின்றன.

ஆனால் சமீப காலமாக, கல்வியறிவு பெருகிவருவதால் திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வு பல இடங்களில் பெருகி வருகிறது.

திருநங்கைகளுக்கு கல்வி உள்ளிட்ட சமூக நிலைகள் வழங்கப்பட்டு வருவதை அடுத்து, சமூக வலைத்தளங்களும் அவர்களுக்கு இடம் அளிக்க முன்வந்துள்ளன.

கூகுள் இணையத்தளம் ஏற்கனவே மூன்றாவது பாலினத்தை பட்டியலில் இணைத்தது. தற்போது அந்த வரிசையில் பேஸ்புக்கும் சேர்ந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணம் செய்துக் கொள்ள மறுத்த, இளம்பெண்ணின் மூக்கை அறுத்த வாலிபர்
Next post ஆபாச படத்தில் நடித்த பிக்கு கைது!