25 வருடங்களாக காணாமல் போன சவூதி நபர் கண்டுபிடிப்பு

Read Time:1 Minute, 45 Second

saudi25 வருடங்களுக்கு முன்னர் வீட்டைவிட்டு வெளியேறி காணாமல் போயிருந்த சவூதியை சேர்ந்த நபரொருவர் அண்மையில் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

சவூதி அரேபியாவின் கிழக்குப் பகுதியிலுள் இஹ்ஷா மகாணத்திலுள்ள வீட்டிலிருந்து குறித்த நபர் தனது 47 வயதளவில் வெளியேறியுள்ளார். இதன் பின்னர் அவரது குடும்பத்தினா இவரை ஒருபோதும் காண்டிருக்கவில்லை.

இந்நிலையில் கடந்த மாதம் குறித்த நபரின் மகன் 25 வருடங்களின் பின்னர் வழங்கிய முறைப்பாட்டினையடுத்தே பொலிஸார் மேற்படி நபரை தேடும் பணியில் தீவிரம் காட்டியுள்ளனர்.

இவ்வளவு காலமும் ஏன் முறைப்பாடு செய்யவில்லை என பொலிஸார் கேள்வி எழுப்பியபோது, ‘தந்தை காணாமல் போனபேது நான் 5 வயது சிறுவனாக இருந்தேன். அச்சம்பவம் பற்றி எனக்குத் தெரியவில்லை’ என பொலிஸாரிடம் காணாமல் போனவரின் மகன் கூறியிருந்தார்.

இது குறித்த பொலிஸ் பேச்சாளர் அப்துல் வஹாப் கூறுகையில், காணமல்போன நபரை தமாம் கைத்தொழில் பகுதியில் வைத்து கண்டுபிடித்தோம். அவருக்கு சுமார் 72 வயது இருக்கும். ஆரோக்கியமாக இருக்கிறார்’ எனத் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாலு மகேந்திரா மரணம்!: அதிர்ச்சியில் திரையுலகம்
Next post கோடீஸ்வரரிடம் கொள்ளையடித்த பௌத்த தேரரின், மடிக்கணினியில் 832 ஆபாசப் படங்கள் கண்டுபிடிப்பு