பாகிஸ்தானில் ஆபாச படம் திரையிட்ட சினிமா தியேட்டரில் குண்டு வீச்சு: 12 பேர் பலி

Read Time:2 Minute, 10 Second

bomp.blasts2பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள பெஷாவரில் ‘ஷாமா சினிமா’ என்ற பெயரில் தியேட்டர் உள்ளது. இந்த நிலையில் நேற்று மதியம் அந்த தியேட்டரில் ஏராளமானவர்கள் சினிமா படம் பார்த்து கொண்டிருந்தனர். அப்போது, அந்த தியேட்டர் மீது அடுத்தடுத்து 3 கையெறி குண்டுகள் வீசப்பட்டன.

இதனால் சினிமா தியேட்டர் இடிந்தது. அங்கு புகையும், தூசியுமா இருந்தது. தியேட்டரில் படம் பார்த்து கொண்டிருந்தவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இச்சம்பவத்தில் 12 பேர் பலியாகினர். 17 பேர் காயம் அடைந்தனர்.

அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு தலிபான்கள் உள்பட வேறு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

இந்த தியேட்டர் அவாமி தேசிய கட்சியின் முன்னணி தலைவர்களின் குடும்பத்தினருக்கு சொந்தமானது.

இங்கு இந்தி படங்கள் ஒளிபரப்படுவதால் தீவிரவாதிகள் அடிக்கடி மிரட்டல் விடுத்து வந்தனர். எனவே தியேட்டர் வாசலில் மெட்டல் டிடெக்டர் கருவி பொருத்தும்படி போலீசார் அறிவுறுத்தி இருந்தனர். ஆனால் தியேட்டர் நிர்வாகிகள் அதை கண்டு கொள்ளவில்லை.

தியேட்டரில் நடந்த குண்டு வீச்சு சம்பவத்துக்கு இந்தி திரைப்படம் திரையிடுவது காரணமல்ல. அங்கு ஆபாச சினிமா படம் காட்டப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஏதோ ஒரு தீவிரவாத குழு குண்டு வீச்சு நடத்தியுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜஸ்டின் பைபரை காதலிக்கவில்லை, அமெரிக்க இளம் பாடகி கெத்தரின்
Next post திருமணமாகி 50 வருடம் சேர்ந்து வாழும் ஜோடிகளைக் கௌரவித்து விருது வழங்கும் போலந்து