ஆஸ்திரேலியாவில் 12 வயது மகளுக்கு திருமணம் செய்து வைத்த தந்தை கைது

Read Time:2 Minute, 10 Second

love.childஆஸ்திரேலியாவில் 12 வயதே நிரம்பிய சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தது தொடர்பாக அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். தனது பெண்ணை விட 14 வயது அதிகமுள்ள லெபனான் நாட்டை சேர்ந்தவருக்கு ஒரு முஸ்லிம் மதகுருவின் உதவியுடன் உதவியுடன் திருமணம் செய்து வைத்துள்ளார்.

ஆஸ்திரேலிய நாட்டுச்சட்டத்தின் படி பெண்ணுக்கு 18 வயது நிரம்பினால் மட்டுமே திருமணம் செய்துகொள்ள முடியும். எனவே, இந்த திருமணத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. சிறுமியை திருமணம் செய்த லெபனான் வாலிபர், திருமணத்தை நடத்தி வைத்த மதகுரு ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுமியின் தந்தை இன்று கைது செய்யப்பட்டார். அவரது ஜாமின் மனுவை கோர்ட் நிராகரித்துள்ளது.

இவ்வழக்கின் விசாரணையின் போது சிறுமியின் தந்தை மீதான குற்றச்சாட்டை நிரூபித்தபோதிலும், அவர் தான் செய்ததில் தவறேதும் இல்லை என்றே கூறுகிறார்.

இதுதொடர்பாக சட்ட உதவி வழக்கறிஞர் கூறுகையில், “குற்றவாளியான தந்தை தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்து வருகிறார். தனது மகள் மிகவும் முதிர்த மனநிலையுடைய பெண் என்றும், தனது கணவனை மிகவும் நேசிப்பதாகவும் கூறுகிறார்” என்றார்.

ஆஸ்திரேலியாவில் திருமணம் செய்ய குறைந்தபட்ச வயது 18 வயது என்று சட்டம் இருப்பதால், பதிவு செய்யப்படாமல் ஏராளமான இளம் வயது திருமணங்கள் நடைபெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அல்ஜீரிய விமான விபத்தில் 78 பேர் பலி! : அபூர்வமாக ஒருவர் மட்டும் காயத்துடன் மீட்பு
Next post இஸ்ரேலில் கன்னி மேரி சிலை அழுவதைக் காணத் திரளும் மக்கள்