மகளைக் காதலன் துஷ்பிரயோகம் செய்ய, இடம்கொடுத்த தாயும் தந்தையும் கைது!

Read Time:1 Minute, 48 Second

sexதனது புதல்வியை அவளின் காதலன் வீட்டிற்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்த இடமளித்ததாகக் கூறப்படும் தாய் தந்தையையும் காதலனையும் இம்மாதம் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படி எல்பிட்டிய நீதிவான் நீதிமன்ற நீதிபதி கேசர சமரதிவாகர உத்தரவிட்டார்.

15 வயதான இந்தச் சிறுமி வசித்து வரும் ஊரகஸ்மவ்ஹந்திய பொலிஸ் பிரதேசத்துக்கு அண்மையிலுள்ள கிராமமொன்றிலுள்ள உல்லாசப் பயண ஹோட்டலொன்றில் கடமையாற்றும் 22 வயதான காதலன் சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்பவராவார்.

யுவதியை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்த காதலன் சிறுமியின் வீட்டுக்கு தேவையானவற்றையும் பெற்றுக் கொடுக்க செலவு செய்து வந்துள்ளார்.

சிறுமியை திருமணம் செய்து கொள்ள இளைஞன் காலம் தாழ்த்துவதாக உணர்ந்த பெற்றோர் விரைவில் திருமணம் செய்து வைக்கும் நோக்குடன் இவ்வாறு தமது வீட்டிலேயே மகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த இடமளித்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டொமினிக்கன் குடியரசை சேர்ந்த மோடல் அழகி, நீச்சல் உடை! (அவ்வப்போது கிளாமர் படங்கள்)
Next post ஜெனிவா செல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை: அனந்தியை அனுப்பத் திட்டம் -சிவி தகவல்