(PHOTOS) 416 மணித்தியாலங்கள் செலவிட்டு உடல் முழுவதும் பச்சை குத்தி..

Read Time:2 Minute, 10 Second

4172_newsthumb_2416 மணித்தியாலங்கள் செலவிட்டு உடல் முழுவதும் பச்சை குத்தி உலக சாதனைக்கு முயற்சிக்கும் கண் பார்வையற்ற பெண்…

வண்ணமயமாக உடல் மழுவதும் பச்சை குத்திக்கொண்டு உலக சாதனை படைக்க முயற்சித்துள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணொருவர்.

ஆனால் அந்த அழகினை அவரால் பார்க்க முடியாது ஏனெனில் அவர் கண்பார்வையற்றவர்.

பச்சை குத்துவதற்கு அடிமையான இப்பெண் 416 மணித்தியாலங்கள் செலவு செய்து உடல் முழுவதும் பச்சை குத்திக் கொண்டுள்ளார். இதற்கு சுமார் 3 வருடங்களாகியுள்ளன.

42 வயதான பிரான் அட்கின்ஸன் என்ற பெண்ணே உடல் முழுவதும் பச்சை குத்திக்கொண்டவர்.

ஒரு பிள்ளையின் தாயான பிரான் அவரது கணவரான ரொன் மற்றும் பச்சை குத்தும் கலைஞரான க்ரெஷ் போவ்மென் உதவியுள்ளனர். இவர்கள் தனக்கு கண்ணாக இருந்ததாக கூறுகிறார் பிரான்.


பிரானின் கழுத்திலிருந்து கால் வரையில் க்ரெஷ் போவ்மென் வண்ணமயமான பச்சையை குத்தியுள்ளார்.


‘எனது 25 ஆவது வயதில் முதலாவது பச்சையை குத்தினேன். 3 வருடங்களுக்கு முன்னரே எனது உடல் முழுக்க பச்சை குத்துவதற்கு தீர்மானித்தேன்.

தற்போது இங்கிலாந்தின் அதிக பச்சை குத்திய பெண்ணாக நான் இருக்க முடியும்.

போவ்மெனின் உதவியுடன் உலகின் அதிக பச்சை குத்திய பெண்ணாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்க முயற்சித்துள்ளேன்’ கண் பார்வையற்ற பெண் பிரான் அட்கிட்ஸன் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சடலமாக மீட்கப்பட்டவர் பேராதனை பல்கலை மாணவனே!
Next post கொழும்பிலிருந்து யாழ். சென்ற வான் விபத்தில் ஐந்து பேர் பலி