வீதி சுத்திகரிப்பாளராக தொழில் புரியும் கோடீஸ்வரி

Read Time:2 Minute, 15 Second

4166_newsthumb_Thumபலருக்கும் வியப்பை ஏற்படுத்தும் விதமாக சீனாவைச் சேர்ந்த கோடீஸ்வரி ஒருவர் வீதி சுத்திகரிப்பாளராக தொழில் புரிகின்றார்.

54 வயதான யூ யூஷென் என்ற கோடீஸ்வரியே வீதி சுத்திகரிப்பாளராக வேலை செய்கின்றார்.


சுமார் 20 கோடி ரூபாவுக்கு சொந்தக்காரியான யுஷென் ஆடம்பரமறற்ற வாழ்க்கை வாழ்வது பலரும் வியப்பாக உள்ளது.

இவர் சீனாவின் சுத்திகரிப்பு திணைக்களத்தில் ஒரு வீதி சுத்திகரிப்பாளராக மாதமொன்றுக்கு 1400 யுவானுக்கு (சுமார் 30 ஆயிரம் ரூபா) வேலை செய்கின்றார்.

இது குறித்து யூவிடம் கேட்டதற்கு, ‘எனது பிள்ளைகளுக்கு நான் சிறந்த முன்மாதிரியாகவும் அவர்களுக்கு நல்ல தொழில் தர்மங்களையும் கற்பிக்க வேண்டும் எனவும் விரும்புகிறேன்.


இந்த தொழில் எனக்கு சம்பளத்தை மட்டும் தரவில்லை. அதனையும் தாண்டி வேறு சிலவற்றையும் தருகிறது. இது மிகவும் முக்கியமானது.

எனது மகன் ட்ரக் வண்டியின் சாரதி. எனது மகள் முழுநேர வேலை ஒன்றில் ஈடுபடுகின்றார்’ என பதிலளித்துள்ளார் யூ.

5 வருடங்களுக்கு முன்னர் அரச அபிவிருத்திகளுக்காக யூ மற்றும் அவரது கணவருக்கு சொந்தமான நிலம் அரசினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதற்கு பதிலீடாக வழக்கப்பட்ட சொத்துகளினாலேயே யூ கோடீஸ்வரியாக மாறியுள்ளார்.

புதுப்பணக்காரியாக மாறியதும் தனது வழக்கங்களை மாற்றிக் கொள்ளாத யூ தொடர்ந்தும் வீதி சுத்திகரிப்பு பணியாளராக வுஹான் நகரில் பணிபுரிவது பலரையும் வியக்க வைக்கின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பீரில் ஆணி… அதிர்ந்த குடி”மகன்”… டாஸ்மாக்குக்கு அபராதம்
Next post சவூதி, மதீனா ஹோட்டலில் தீ விபத்து : 15 யாத்திரிகர்கள் பலி: 130 பேர் காயம்