(PHOTOS) படகொன்றிலிருந்து 8150 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினை ஆஸி கடற்படையினர் கைப்பற்றினர்

Read Time:1 Minute, 36 Second

4145_neபடகொன்றிலிருந்து 70 கோடி அவுஸ்திரேலிய டொலர்களுக்கும் (சுமார் 8150 கோடி இலங்கை ரூபா,  3885 கோடி இந்திய ரூபா) அதிகமான பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளை அவுஸ்திரேலிய படையினர் கைப்பற்றி அழித்துள்ளனர்.

இந்து சமுத்திரத்தில் தான்ஸானியாவுக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட நடடிக்கையொன்றின்போது படகொன்றிலிருந்து இப்போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக அவுஸ்திரேலிய கடற்படை இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய கடற்படையின் எச்.எம்.ஏ.எஸ். கப்பலில் இருந்த கடற்படையினர் படகொன்றில் ஏறி சோதனையிட்டபோது அதிலிருந்த 353 கிலோகிராம்  போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக அவுஸ்திரேலிய கடற்படையின் கொமடோர் டெரில் பாட்ஸ் தெரிவித்துள்ளார்.

இப்போதைப்பொருளை பரிசோதனைக்குட்படுத்தியபோது அது ஹெரோயின் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதையடுத்து அப்போதைப்பொருளின் மாதிரிகள் சிலவற்றை எடுத்துவைத்துவிட்டு ஏனையபகுதி போதைப்பொருள் அழிக்கப்பட்டது எனவும் அவர் கூறினார்.



Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தொழில் தருவதாக கூறி பாலியல் துஷ்பிரயோகம்; பாடசாலை அதிபர் கைதாகி விளக்கமறியலில்!
Next post (+18PHOTOS) கற்பழிப்பு செய்த நபர், ஆணுறுப்பு அறுத்து வாய்க்குள் வைக்கப்பட்டு கொலை!