(VIDEO) அரை நிர்வாணமாக தூக்கத்தில் நடக்கும் நபர்: பல்கலைகழக மாணவர்கள் அச்சம்

Read Time:1 Minute, 52 Second

4137_newsthumb_Thumஅரை நிர்வாணமாக தூக்கத்தில் நடக்கும் நபரால் அப்பகுதியிலுள்ள பல்கலைக் கழக மாணவ, மாணவிகள் அச்சமும் விசனமும் வெளியிட்டுள்ள சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

தூக்கத்தில் நடக்கும் இந்த நபர் ஒரு சிற்பம் என்றால் நம்ப முடிகிறதா? தூக்கத்தில் நடக்கும் நபர் வடிவிலான இந்த சிற்பம் மஸச்சுஸெட்ஸ் மாநிலத்திலுள்ள வெல்லஸ்லி பல்கலைக் கழககத்தின் நூதனசாலை கண்காட்சிக்கா வைக்கப்பட்டுள்ளது.

இதனை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பல்கலை வளாகத்தினுள் வெளியில் வைக்கப்பட்டுள்ளது.

இதனை டொனி மடெலி என்பவர் வடிவமைத்துள்ளார்.

இச்சிற்பம் கடந்த திங்கட் கிழமை நிறுவப்பட்டுள்ளது.

இதனையடுத்து இச்சிற்பத்தினை அகற்றுமாறு பல்கலைகழக மாணவர்கள் சுமார் 270 பேர் கையெழுத்திட்டு இணையத்தளம் வழியாக நூதனசாலை நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர்.

நிஜமான ஆணொருவர் அரை நிர்வாணமாக தூக்கத்தில் நடந்துசெல்வது போல உயிரோட்டமாக உள்ள இச்சிற்பம் கைகளை நீட்டி பேய் ஒன்று நடப்பது போலும் உள்ளதால் அச்சமாக இருப்பதாக அம்மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இச்சிற்பம் அதற்கான இலக்கினை வெற்றிகரமாக எட்டியுள்ளதாக நூநனசாலையின் பணிப்பாளர் லிஸா பிச்மேன் இணையத்தில் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சேலத்தில் பிளஸ்–2 மாணவியிடம் ‘சில்மிஷம்’: பள்ளி நிர்வாகிக்கு பெண்கள் செருப்படி
Next post ​ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சார்ஜாவில், பாதணிக்கான மோதலில் மூவர் பலி