ஏஆர் ரஹ்மான் ஸ்டுடியோவை இழுத்து மூடச் சொல்லி அதிகாலையில் கலாட்டா செய்த சிறுவன்!

Read Time:2 Minute, 12 Second

08-ar-rahman-ameen-600சென்னை: ஏ ஆர் ரஹ்மானின் இசைக்கூடத்தை இழுத்து மூடச் சொல்லி ஒரு சிறுவனம் உத்தரவிட்டு கலாட்டா செய்துள்ளார். அப்போது ஏ ஆர் ரஹ்மானும் அங்கிருந்திருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்து ஏ ஆர் ரஹ்மானே கூறியிருப்பதாவது: ஒரு புதிய இசை ஆல்ப பணிக்காக எனது ஒலிப்பதிவு கூடத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அதிகாலை 3 மணி இருக்கும். எதிர்பாராத புதிய விருந்தாளியாக ஒரு சிறுவன் உள்ளே நுழைந்தான்.

நேராக என்னுடைய சவுண்ட் எஞ்ஜினியரிடம் சென்று ‘எல்லாவற்றையும் இழுத்து மூடுங்கள்’ என்று கம்பீரமாக உத்தரவிட்டான். அவனது குரலை கேட்ட அனைவரும் திகைத்துப் போய் விட்டனர். குரல் வந்த திசையை பார்த்த நானும் ஒரு கணம் ஆச்சரியத்தில் பிரமித்து போய் நின்று விட்டேன்.

கட்டாயமாக ஏழு மணி நேரமாவது நான் உறங்கி, ஓய்வெடுக்க வேண்டும் என உபதேசித்து, என்னை கையோடு அழைத்து செல்வதிலேயே குறியாக இருந்த என் மகன் அமீன்தான் அந்த சிறுவனம்.

அவனைச் சமாதானம் செய்து அனுப்பி வைக்க 10 நிமிடங்களுக்கு மேல் நான் போராட வேண்டியதாகி விட்டது.

அதன் பிறகு, எல்லா பணிகளையும் நிறுத்தி விட்டு, நான் உறங்க செல்லும்படி ஆகி விட்டது. ஹும்… காலம் தான் எவ்வளவு வேகமாக விரைந்தோடுகிறது? குழந்தைகள் என்றும் குழந்தைகளாகவே இருப்பதில்லை.

எனது மகன் அமீன், இன்னும் குழந்தை இல்லை என்பதை நான் உணர்ந்த தருணம் இது,” என்று தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாறுவேடத்தில் சென்ற அதிரடிப்படையினரால் தேரர் கைது
Next post உறுப்பு நாடுகளின் தீர்மானத்திலேயே சர்வதேச விசாரணை -ஐ.நா