மாறுவேடத்தில் சென்ற அதிரடிப்படையினரால் தேரர் கைது

Read Time:1 Minute, 24 Second

arrest-pikku1கஜ முத்துக்களை விற்பனை செய்ய முயன்ற தேரர் ஒருவர் உட்பட ஒரு குழுவினரை பேராதனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கம்பளை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கை ஒன்றின் போதே இவ்வாறு கைதாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு கஜமுத்துக்களை 50 இலட்ச ரூபாவிற்கு விலைபேசி தரகர் ஒருவர் மூலம் குறிப்பிட்ட விகாரைக்கு மாறு வேடத்தில் அதிரடிப்படையினர் சென்றுள்ளனர்.

இதனையடுத்து மாறுவேடத்திலிருந்த அதிரடிப்படையினர் விகாரையின் தேரரிடம் பேரம் பேசி 45 இலட்சத்திற்கு அதனைக் கொள்வனவு செய்ய இணங்கியுள்ளனர்.

வர்த்தகம் ஆரம்பமாவதற்குள் அதிரடிப்படையினர் தமது சுய ரூபத்தைக் காட்டி பிக்குவையும் சம்பந்தப்பட்டவர்களையும் கைதுசெய்து பேராதனைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பேராதனைப் பொலிஸார் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சூர்யாவின் சம்பளம் 40 கோடி
Next post ஏஆர் ரஹ்மான் ஸ்டுடியோவை இழுத்து மூடச் சொல்லி அதிகாலையில் கலாட்டா செய்த சிறுவன்!