அடிவாங்கிய புலி தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்வகு பதிய புலுடா விடுகின்றது

Read Time:2 Minute, 23 Second

LTTE.Pulithevan.1.jpgஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளான டென்மார்க், சுவீடன், பின்லாந்து போன்ற நாடுகளின் பிரதிநிதிகளை கண்காணிப்பாளராக தாம் எற்றுக்கொள்ள முடியாதென நோர்வேயில் கடந்த 8.–9 ந் திகதிகளில் இடம்பெற்ற கருத்தரங்கின்போது சுனா.பனா முழக்கமிட்டிருந்தார். அதற்கு எதிர்மாறான கருத்தினை புலியின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் எனத் தம்மை அழைத்துக்கொள்ளும் புலித்தேவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தாம் நோர்டிக் நாடுகளின் (டென்மார்க், சுவீடன், பின்லாந்து ) கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர்களைத் தொடர்ந்தும் தமது பணியினை மேற்கொள்ளுமாறு நோர்வேயின் விசேட சமாதானத் தூதுவரிடம் தெரிவித்துவிட்டதாக பதியதேர் புதிரை ராய்ட்டார் செய்தி நிறவனத்திற்கு வழங்கியுள்ளார்.

தமது வேண்டுகோளில் 2002 ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை அமுல் செய்வதற்கு அரசு முன்வரவேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் புலியின் அரசியல் துறைப் பொறுப்பாளர் எனத் தம்மை அழைத்துக்கொள்ளும் சுனா, பனா நேற்றைய தினம் ராய்ட்டர் செய்தி நிறவனத்திற்கு வழங்கிய செவ்வியில் தம்மாலான அனைத்து தற்கொலைத் தாக்குதல்களையும் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை தாம் முன்னெடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

மேற்படி இரு முரண்பாடான அறிக்கைகளும் புலியின் அரசியலை மட்டுமன்றி புலியின் நிர்வாகத்திலுள்ள உள் முரண்பாடுகளையும் கோடிட்டுக்காட்டுவது புலனாகின்றது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மூன்றாவது ஆட்டத்திலும் ஜெர்மனி வெற்றி!
Next post கடற்புலிகள் தொடர்பில் பொலீஸ் மாஅதிபர்