(PHOTOS) தாயைக் கொன்று உடலுறுப்புகளை வெட்டி உண்ட மூன்று சகோதரர்கள்: பிலிப்பைன்ஸில் கொடூரம்..
மத ரீதியாக பலிகொடுக்கும் நடவடிக்கைக்காக தமது தாயாரை படுகொலை செய்த 3 பிள்ளைகள், அவரது உடல் உறுப்புக்களை உண்ட கொடூர சம்பவம் பிலிப்பைன்ஸில் இடம்பெற்றுள்ளது.
அம்பதுவான் எனும் இடத்திலுள்ள வீட்டில் முஸலா அமில் (56 வயது) என்ற மேற்படி பெண்ணின் உடல் மோசமாக சிதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த உடலிலுள்ள பல உறுப்புக்கள் வெட்டி அகற்றப்பட்டிருந்தன.
இந்த சடலம் கண்டுபிடிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன் குறிப்பிட்ட வீட்டிலிருந்து விநோதமான சத்தங்கள் கேட்டதாக அயலவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அந்தப் பெண்ணின் மகன்மாரான டன்ரி (35 வயது), பரோய் (21 வயது) மற்றும் இப்ராஹிம் (18வயது) ஆகியோர் படுகொலைக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குடும்ப சச்சரவு ஒன்றையடுத்தே அவர்கள் படுகொலையை மேற்கொண்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இந்நிலையில் தமது தாயை படுகொலை செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு மறுப்புத் தெரிவித்துள்ள மகன்மார், தமது தாயாருக்கு தீய ஆவியொன்றால் ஏற்பட்ட நோயைக் குணப்படுத்த தாம் முயற்சித்ததாக தெரிவித்துள்ளனர்.
Average Rating