சிறார் பாலியல் துஷ்பிரயோகம்: வத்திக்கான் மீது ஐ.நா கண்டனம்

Read Time:1 Minute, 35 Second

rape.child.abuseரோமன் கத்தோலிக்கத் திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார்கள் ஆயிரக்கணக்கான சிறுவர், சிறுமியர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வதை அனுமதிக்கும் கொள்கைகளை, வத்திக்கான் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாக ஐ.நா மன்றம் குற்றம் சுமத்தியுள்ளது.

சிறார்களின் உரிமைகள் பாதுகாப்புக்கான ஐ.நா மன்றக் குழு, ( சி.ஆர்.சி), சிறார்களைத் துஷ்பிரயோகம் செய்ததாக அறியப்படும் அல்லது சந்தேகிக்கப்படும் பாதிரியார்களை போப் உடனடியாக அகற்றவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

மேலும், ஒரு பாலுறவு, கர்ப்பத்தடை மற்றும் கருச்சிதைவு ஆகிய விடயங்கள் குறித்து வத்திக்கானின் அணுகுமுறைகளையும் அக்குழு கடுமையாக விமர்சித்துள்ளது.

ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமைப் பீடமான வத்திக்கான், ஏற்கனவே , திருச்சபைக்குள் சிறார்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைத் தடுக்க குழு ஒன்றை நியமித்துள்ளது.

வத்திக்கான் இது குறித்து அறிக்கையொன்றை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மன்னார் மனிதப் புதைகுழி நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை -பொலிஸ் ஊடகப்பேச்சாளர்
Next post உலகின் மிக ஆபத்தான செல்ஃபீ படம்?