(PHOTOS) ஆபாச வீடியோவில் தோன்றியதால், பட்டத்தை இழந்த அழகுராணி

Read Time:3 Minute, 57 Second

4111_newsthumb_Untitled-1அமெரிக்காவைச் சேர்ந்த மற்றொரு முன்னாள் அழகுராணியொருவர் ஆபாச வீடியோவில் தோன்றியமையால் தனது பட்டத்தை இழந்துள்ளார்.

கிறிஸ்டி அல்தாயஸ் எனம் இந்த யுவதி பிராந்திய அழகுராணியா தெரிவான பின் 2012 ஆம் ஆண்டு மிஸ் கொலராடோ மாநிலத்தின் மிஸ் டீன் யூ.எஸ்.ஏ. கொலராடோ அழகுராணி போட்டியில் பங்குபற்றினார். அப்போட்டியில் அவர் இரண்டாமிடத்தைப் பெற்றார்.  

ஜக்குலின் ஸக்கரினோ எனும் யுவதி கொலராடோ மாநில அழகுராணியாக முடிசூட்பட்பட்டார்.

எனினும் அவருக்கு ஏதேனும் நடந்தால் அவ்வெற்றிடத்தை நிரப்புதவதற்கு தயாராக இருக்குமாறு போட்டி ஏற்பாட்டாளர்களால் கிறிஸ்டி அல்தாயஸ் அறிவுறுத்தப்பட்டிருந்தார்.

சிலவேளை ஜக்குலினால் மிஸ் டீன் யூ.எஸ்.ஏ. போட்டியில் பங்குபற்ற முடியாவிட்டால் அவருக்கு பதிலாக கிறிஸ்டி அல்தாயஸ் கொலராடோ மாநிலத்தின் சார்பில் பங்குபற்றும் வாய்ப்பும் இருந்தது.

இந்த அழகுராணி போட்டியின் மூலம் பிரபலமாகனவராகத் திகழ்ந்த கிறிஸ்டி அல்தாயஸின் தோற்றம் கொண்ட பெண்ணொருவர் தோன்றும் ஆபாச வீடியோவொன்று கடந்தவாரம் வெளியாக சர்ச்சையை ஏற்படுத்தியது.

தான் 18 வயதானவர் எனவும் அது தனது முதலாவது பாலியல் வீடியோ எனவும் அந்த யுவதி கூறுவதும் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய மிஸ் டீன் யூ.எஸ்.ஏ. கொலராடோ அழகுராணி போட்டி ஏற்பாட்டாளர்கள் அந்த வீடியோவில் தோன்றும் யுவதி கிறிஸ்டி அல்தாயஸ்தான் எனக் கண்டறிந்தனர்.

அதையடுத்து 2012 ஆம் ஆண்டு மிஸ் டீன் யூ.எஸ்.ஏ. கொலராடோ அழகுராணி போட்டியில் கிறிஸ்டி அல்தாயஸ் பெற்றிருந்த இரண்டாமிடம் பறிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறெனினும், அமெரிக்காவில் உள்ளூர் அழகுராணிகளாக தெரிவான யுவதிகள் ஆபாச வீடியோவில் தோன்றியதால் அழகுராணி பட்டத்தை பறிகொடுத்தமை இது முதல் தடவையல்ல.

2006 ஆம் ஆண்டு மிஸ் நவேடா அழகுராணியாகத் தெரிவான கெத்தி ரீஸ் எனும் யுவதியின் ஆபாச படங்கள் இணையத்தளத்தில் வெளியானதால் அழகுராணி பட்டத்தை இழந்தார்.

2009 ஆம் ஆண்டில் மிஸ் கலிபோர்னியா அழகுராணியான கெரி பிரஜீன் எனும் யுவதி பிரத்தியேகமாக ஒளிப்பதிவு செய்திருந்த பாலியல் வீடியோவொன்று வெளியானதால் அவர் அழகுராணி பட்டத்தை இழந்தார்.

டெலவெயர் மாநிலத்தைச் சேர்ந்த மிஸ் டீன் யூ.எஸ்.எஸ் அழகுராணியாக தெரிவான  மெலிஸா கிங் என்பவரும் ஆபாச வீடியோவொன்றில் தோன்றியதால் கடந்த வருடம் தனது அழகுராணி பட்டத்தை இழந்தார்.

மெலிஸா கிங் தோன்றிய ஆபாச வீடியோவை வெளியிட்ட இணையத்தளமே கிறிஸ்டி அல்தாயஸின் ஆபாச வீடியோவையும் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குளிர்கால ஒலிம்பிக் கழிவறையில் மீன்பிடிக்கத் தடை!
Next post புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி