மனைவியை கணவர் அடிக்கலாம்: ஆப்கானிஸ்தானில் புதிய சட்டம்

Read Time:1 Minute, 50 Second

attack-05ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுவது தொடர்ந்து நீடித்து வருகிறது. அவர்களை அடித்து துன்புறுத்துவது, கள்ளக்காதல் போன்றவற்றில் ஈடுபடுபவர்களை கல்லால் அடித்து கொல்வது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. வீட்டில் மனைவியை கணவர் அடிப்பது சர்வ சாதாரணமான செயலாக அங்கு கருதப்படுகிறது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்தில் புதிய சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் வீட்டு கவுரவத்தை காப்பாற்றும் வகையில் மனைவி மற்றும் மகள்களை ஆண்கள் அடித்தால் அது தவறு அல்ல. இதுபோன்ற குற்றங்களில் வழக்கு தொடர்ந்தாலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் கோர்ட்டுக்கு வரவேண்டியதில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இந்த சட்டம் அதிபர் ஹமீது ஹர்சாய் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. புதிய சட்டத்துக்கு மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் கவுரவ கொலைகள் என்ற பெயரில் பெண்களை கொல்வது அதிகமாக நடந்து வருகிற நேரத்தில் இதுபோன்ற சட்டம் கொண்டு வந்திருப்பது பெண்களை மிகவும் பாதிக்கும். இதன் மூலம் பெண்கள் உரிமைகள் முற்றிலும் மறுக்கப்பட்டுள்ளன என்று அவர்கள் கூறியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வீட்டில் இறந்து கிடந்த பெண் எட்டு ஆண்டுகளுக்கு பின் கண்டெடுப்பு
Next post குளிர்கால ஒலிம்பிக் கழிவறையில் மீன்பிடிக்கத் தடை!