சிம்புவுக்கு புகைச்சல் தர தெலுங்கு ஹீரோவுக்கு, ஹன்சிகா வலை..
சிம்பு-ஹன்சிகா இடையே காதல் ஏற்பட்டு சமீபத்தில் அது முடிவுக்கு வந்தது. இப்போது தனது மாஜி காதலி நயன்தாராவுடன் சிம்பு நடித்து வருகிறார். ஹன்சிகாவை கடுப்பேற்றத்தான் நயன்தாராவுடன் சிம்பு நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தெலுங்கில் விஷ்ணு ஜோடியாக ஹன்சிகா நடித்து வருகிறார். சிம்புவின் நெருங்கிய நண்பர், விஷ்ணு. இதனால் பதிலுக்கு பதிலாக சிம்புவை கடுப்பேற்றும் விதமாக விஷ்ணுவை பாராட்டி தள்ளியிருக்கிறார் ஹன்சிகா. சினிமாவில் இருக்கும் தனது ஒரே ஆண் நண்பர் என்றும் விஷ்ணுவை குறிப்பிட்டுள்ளார் ஹன்சிகா. இது பற்றி ஹன்சிகா கூறியது: தமிழ், தெலுங்கு இருமொழிகளிலும் நல்ல வேடங்கள் அமைகின்றன.
அதனால் எதையும் தவிர்ப்பதில்லை. கால்ஷீட் இல்லாத பட்சத்தில்தான் அதுபோன்ற படங்களை ஏற்க முடியாமல் போகிறது. டோலிவுட்டில் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் எனக்கு நண்பர் என்று பார்த்தால் விஷ்ணு மட்டும்தான். தேனிக்கய்னா ரெடி படத்தில் விஷ்ணுவுடன் நடித்தேன் மீண்டும் பாண்டவலு பாண்டவலு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறேன். திரையுலகில் எனக்கிருக்கும் ஒரே நண்பர் இவர்தான். அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தாலே ஸ்பாட் கலகலப்பாகிவிடும்.
பாலிவுட்டில் மல்டி ஸ்டார் படங்கள் நிறைய வருகிறது. ஆனால் அதில் பல ஹீரோக்கள் நடித்தாலும் குறிப்பிட்ட ஒரு ஹீரோவுக்குதான் நிறைய காட்சிகள் இருக்கும். தற்போது நடிக்கும் பாண்டவலு பாண்டவலு படத்திலும் பெரிய ஸ்டார்கள் நடிக்கிறார்கள். ஆனால் இதில் எல்லோருக்கும் சமஅளவு நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பு இருக்கிறது.
ஏனென்றால் ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியமானவை. பொதுவாகவே நான் ரொம்ப ஜாலியான டைப் அதுபோன்ற வேடங்கள் அமைந்தால் நடிப்பும் இயல்பாகவே அமைந்துவிடுகிறது. இவ்வாறு ஹன்சிகா கூறினார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating