சர்வதேச விண்வெளித் தோட்டத்தில் விளைவிக்கப்படும் பயிர்கள்..

Read Time:2 Minute, 18 Second

511fc354-3592-41c5-9bb5-2511f30aa399_S_secvpfஉலக நாடுகள் இணைந்து அமைத்துள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் பணியில் உள்ள விண்வெளி வீரர்களின் உணவுத் தேவைகளுக்காக அங்கே லடா என்ற பசுமைத் தோட்டம் அமைக்கப்பட்டு அங்கு சோதனை முயற்சியாக காய்கறிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

பட்டாணி, கீரை வகைகள் மற்றும் குள்ள வகையைச் சேர்ந்த கோதுமை போன்றவை இதுவரை அங்கு விளைவிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சாப்பிடுவதற்கு பாதுகாப்பானவை என்ற சான்றிதழைப் பெற்றுள்ளதாக உயிர்மருத்துவவியல் சிக்கல்கள் குறித்து ஆய்வு செய்யும் ரஷ்ய நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ரஷ்ய ஆய்வாளரான மார்கரிட்டா லெவின்ஷிக் சமீபத்தில் மாஸ்கோவில் நடைபெற்ற விண்வெளிக் கருத்தரங்கின் ஆண்டு மாநாட்டில் தெரிவித்தார்.

இந்த ஆண்டிற்கான பழுது பார்க்கும் பணி நிறைவடைந்தவுடன் அரிசி, தக்காளி, மணி மிளகு போன்றவை அங்கு பயிரிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

விண்வெளி வீரர்களின் உணவுத் தேவைக்காக இந்தப் பயிர்கள் பயன்படுவதோடு விண்வெளியில் ஏற்படக்கூடிய மரபணு மாற்றங்கள் குறித்த ஆய்விலும் இவை பயன்படுத்தப்படும் என்று ஆய்வு நிறுவனம் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்வெளியில் அமைக்கப்படும் வாழ்விடம் குறித்த நம்பிக்கையை அளிப்பதாக இந்த முடிவுகள் இருப்பதாக ரஷ்ய ஆய்வு நிறுவனம் தெரிவிக்கின்றது.

அமெரிக்காவின் உடா மாகாண பல்கலைக்கழகத்தின் விண்வெளி டைனமிக்ஸ் ஆய்வகத்துடன் இணைந்து ரஷ்ய நிறுவனம் இந்த விவசாய முயற்சியில் இறங்கியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பேச்சுவார்த்தைக்கான பிரதிநிதியாக, தலிபான்களால் இம்ரான் கான் நியமனம்
Next post காதலியிடம் வித்தியாசமான முறையில் விருப்பத்தை தெரிவித்த உக்ரேனிய ஆர்ப்பாட்டக்காரர்