மூன்றாவது ஆட்டத்திலும் ஜெர்மனி வெற்றி!

Read Time:3 Minute, 33 Second

Germany.Flag.1.jpgஈக்வடாரைத் தோற்கடித்து “ஏ’ பிரிவில் 3 வெற்றிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது போட்டியை நடத்தும் ஜெர்மனி. பெர்லினில் உள்ள ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஈக்வடார் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது ஜெர்மனி. ஆட்டத்தின் 4-வது நிமிஷத்தில் மிராஸ்லாவ் குளோஸ் அடித்த கோலால் உற்சாகத்தில் மூழ்கியது ஒலிம்பிக் ஸ்டேடியம். அவரே முதல் பாதி நேர ஆட்டம் முடிய ஒரு நிமிஷம் இருக்கையில் மீண்டும் ஒரு கோல் அடித்து அணியின் முன்னிலையை வலுப்படுத்தினார்.

57-வது நிமிஷத்தில் பொடோல்ஸ்கி அடித்த கோல், ஜெர்மனியை 3-0 என உயர்த்தியது. அதன்பிறகு இரு அணிகளும் கோல் போடவில்லை. மிராஸ்லாவ் குளோஸ் இந்த ஆட்டத்தில் 2 கோல்களை அடித்ததையடுத்து மொத்தம் 4 கோல்களை இதுவரையில் சேர்த்து, அதிக கோல்களை அடித்த வீரராகியுள்ளார்.

முதலிடத்துக்கு….இவ்விரு அணிகளும் ஏற்கெனவே 2-வது சுற்று ஆட்டத்துக்கு தகுதி பெற்றுவிட்டன. ஆனால், பிரிவில் முதலிடத்தைப் பிடிப்பதன் மூலம் அடுத்த சுற்று ஆட்டத்தில் எளிதான அணியுடன் விளையாடலாம் என்ற நிலையைப் பெற்றிருந்தன. அந்த வகையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி இங்கிலாந்துடன் விளையாடுவதைத் தவிர்க்க முடியும். அதனால் இந்த ஆட்டம் மிகவும் எதிர்பார்ப்பை பெற்றிருந்தது. ஆனால், ஈக்வடார் அணி ஒரு கோல்கூட அடிக்க முடியாமல் தோல்வியைத் தழுவியது.

ஜெர்மனி 9 புள்ளிகளையும், ஈக்வடார் 6 புள்ளிகளையும் சேர்த்து “ஏ’ பிரிவில் முறையே முதல் 2 இடங்களைப் பிடித்தன.

போலந்து வெற்றி: ஹனோவரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மற்றொரு “ஏ’ பிரிவு ஆட்டத்தில் கோஸ்டா ரிகா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது போலந்து.

இவ்விரு அணிகளும் ஏற்கெனவே போட்டியிலிருந்து வெளியேறியதால் இந்த ஆட்டம் சம்பிரதாயமாகவே அமைந்திருந்தது. அதில் போலந்து வெற்றி பெற்று, வென்ற திருப்தியுடன் போட்டியிலிருந்து வெளியேறியது.

பார்தோஸ் போஸôக்கி போலந்துக்கு 2 கோல்களையும் அடித்தார். ஆனால் கோம்ஸ் அடித்த கோலால் ஆட்டத்தின் 25}வது நிமிஷத்தில் கோஸ்டாரிகா முன்னிலை பெற்றது குறிப்பிடத்தக்கது.

போலந்துக்கு இது முதலாவது வெற்றி. அதே சமயம் கோஸ்டா ரிகா 3 ஆட்டங்களிலும் தோல்வியைத் தழுவி வெளியேறியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post உலகக் கோப்பை : உக்ரைன், ஸ்பெயின் வெற்றி!
Next post அடிவாங்கிய புலி தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்வகு பதிய புலுடா விடுகின்றது