நைஜீரியாவில் தீவிரவாதிகள் வெடி குண்டு தாக்குதல்: 74 பேர் பலி

Read Time:1 Minute, 45 Second

3985a1b2-f354-457b-8ce1-c591c910d18c_S_secvpfநைஜீரியாவில் அரசுக்கு எதிராக ‘போகோஹாரம்’ என்ற தீவிரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர். போர்னோ, அதமாவா, போபே உள்ளிட்ட 3 மாகாணங்களில் இவர்கள் தாக்குதல் அதிகரித்துள்ளது.

எனவே, அங்கு கடந்த மே மாதம் முதல் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அங்கு ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், போர்னோ மாகாணத்தில் காவுரி கிராமத்தில் மக்கள் கூடும் சந்தையில் தீவிரவாதிகள், வெடி குண்டுகளை புதைத்திருந்தனர். மேலும் இக்கிராமத்தை சுற்றிலும் ஆங்காங்கே அவற்றை மறைத்து வைத்திருந்தனர்.

பின்னர் அக்குண்டுகளை வெடிக்க செய்தனர். அதே நேரத்தில் அங்குள்ள வீடுகளுக்கும் தீவைத்தனர். துப்பாக்கியிலும் சுட்டு அட்டூழியம் செய்தனர். இத்தாக்குதலில் 52 பேர் உயிரிழந்தனர்.

அதே நேரத்தில் அதமாவா மாகாணத்தில் வாகா காலா கிராமத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நேற்று முன்தினம் பிரார்த்தனை நடந்தது. அதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

அப்போது, அங்கு வந்த தீவிரவாதிகள் கூட்டத்தினரை நோக்கி சரமாரியாக சுட்டனர். அதில் 22 பேர் பலியாகினர். இந்த 2 சம்பவங்களிலும் 74 பேர் பலியாகி உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மைகோலா அசாரோ பதவி விலக வேண்டும்
Next post இந்திய வீட்டுத்திட்ட மோசடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!