இலங்கை தமிழர் பிரச்சினை- தி.மு.க. கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்
இலங்கை தமிழர் பிரச்சினையில் அமைதி ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இலங்கையில் விடுதலைப்”லிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்டுள்ள `திடீர்’ மோதலால் அங்கு பதட்டம் நிலவுகிறது. உயிருக்கு பயந்து ஏராளமான த-ழ் குடும்பங்கள் த-ழ்நாட்டுக்கு அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர். இலங்கை ‘ரச்சினை குறித்து ஆலோசனை நடத்த தி.மு.க. தோழமை கட்சிகள் கூட்டம் சென்னை அண்ணாஅறிவாலயத்தில் நேற்று மாலை நடந்தது. தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி பொருளாளர் சுதர்சனம், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சி சார்’ல் டி.கே.ரங்கராஜன், இந்திய கம்ïனிஸ்டு கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன், இந்திய ïனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மத்திய அரசை வலியுறுத்தி 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அந்த தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
* இலங்கையில் நார்வே நாடு ஈடுபட்டு நடத்திய அமைதிப்பேச்சு வார்த்தை சுமூகமாக முடிந்து அங்கே அந்த மக்களுக்கான வளர்ச்சிப்பணிகளில் இலங்கை அரசும், போராளிகளும் அக்கறை காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது நிறைவேறாமல் -ண்டும் இரு சாராரும் மோதிக்கொள்ளும் நிலையும் – அந்த நாட்டின் அப்பாவி மக்கள் கண்ணி வெடிகளாலும், விமானத்தாக்குதலாலும் கொல்லப்படும் சம்பவங்கள் நடக்கின்றன.
அதன் விளைவாக த-ழ்நாட்டை நோக்கி அகதிகள் வந்து குவிவதும், இந்தியா இலங்கை இரண்டுக்கும் இடையே வாழ்கின்ற மக்களின் மனத்தைப் பெரிதும் பாதிக்கும் அளவுக்கு அமைந்துள்ளதையும், இந்தப்’ரச்சினை ஏற்கனவே விரும்பத்தகாத பல விபரீத வேதனையான நிகழ்வுகளுக்கு காரணமாக அமைந்தது. இதை ஆழமாக எண்ணிப்பார்த்து, இலங்கையில் அமைதிக்கு வழி காண இந்திய அரசு ஆவன செய்திட வேண்டும் என்று நாங்கள் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றோம்.
-னவர்களுக்கு பாதுகாப்”
* த-ழ்நாட்டு -னவர்களுக்கு இலங்கை ராணுவத்தினரால் தொடர்ந்து இழைக்கப்படும் கொடுமைகள் நிறுத்தப்படவும், அந்த -னவர்களுக்கு உயிர், உடமை, உரிமை ஆகியவற்றுக்கு உத்திரவாதம் அளிக்கப்படவும் இந்திய, இலங்கை அரசுகள் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டம் முடிந்த ‘றகு முதல்-அமைச்சர் கருணாநிதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- மத்திய அரசு எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
பதில்:- அவர்கள் எது எடுத்தாலும், எப்படி எடுத்தாலும் அது நடவடிக்கை தான். நாங்கள் பொதுவாக சொல்லியிருக்கிறோம், என்ன எடுக்கிறார்கள் என்று பார்ப்போம்.
கேள்வி:- இலங்கையில் இருந்து வரும் அகதிகளுக்கு எது மாதிரியான பாதுகாப்” அளிக்கப்படும்?
பதில்:- அகதிகள் நிலை என்ன? அவர்களின் தேவைகள் என்ன? என்பதை நேரில் கண்டறிந்து வர அமைச்சர்கள் சுப.தங்கவேலன், பெரிய கருப்பன் ஆகிய இருவரும் சென்று வந்துள்ளனர். அவர்கள் அதற்கான அறிக்கையுடன் காத்து இருக்கிறார்கள்.
கேள்வி:- இலங்கையில் உண்மை நிலையை அறிய இந்தியாவில் இருந்து அனைத்துக் கட்சி எம்.’.க்கள் குழுவை அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளதே?
பதில்:- கோரிக்கை வைப்பவர்கள் தான் அதைப்பற்றி விளக்க வேண்டும். ‘ரதமரும் மத்திய அரசும் என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செயல்களை ஆற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளோம். அதைத்தவிர மத்திய அரசுக்கு எதுவும் நான் இப்போது யோசனை சொல்லவில்லை.
கேள்வி:- இந்த ‘ரச்சினை குறித்து த-ழகத்திலே அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை கூட்டுவீர்களா?
பதில்:- இன்று நடந்தது அனைத்துக் கட்சிகள் கூட்டம் தான். இன்றைய கூட்டத்தில் முதல் கட்டமாக ஏழு கட்சிகளின் தலைவர்கள் கூடிப்பேசி கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டிருக்கிறோம். இந்த அறிக்கையும், வேண்டுகோளும் ‘ரதமருக்கு இன்றே அனுப்பப்படும். நானும் தொலைபேசியில் ‘ரதமரோடு பேசுவேன்.
கேள்வி:- த-ழகத்திலே உள்ள கட்சிகள் சொல்லக்கூடிய அறிவுரையை விடுதலைப்”லிகள் ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலையில் இருக்கிறதா?
பதில்:- எனக்கு தெரியாது.
கேள்வி:- -னவர்கள் -து நடக்கின்ற தாக்குதல் இந்திய பகுதிக்குள் நடக்கிறதா? அல்லது அவர்கள் பகுதியிலே நடக்கிறதா?
பதில்:- கேட்டால், அவர்கள் பகுதியில் நடந்ததாக சொல்வார்கள். -னவர்கள் -து தாக்குதல் என்பது இலங்கையில் தற்போது நடக்கின்ற சம்பவங்களையொட்டி நடப்பதாக சொல்ல முடியாது. தொடர்ந்து கடலில் -ன் ‘டிக்க செல்லும்போது எல்லாம் -னவர்கள் -து இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. எந்த அரசு த-ழ்நாட்டில் இருந்தாலும் அதைப்பற்றி உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனாலும் அவர்களின் வன்முறை நடவடிக்கைகளும் தொடருகின்றன. இதற்கொரு முற்றுப்”ள்ளி வைக்கவேண்டும் என்பதுதான் இன்றைய தீர்மானத்தின் நோக்கம்.
கேள்வி:- தற்போது நூற்றுக்கணக்கில் வந்து கொண்டிருக்கின்ற அகதிகள் ஆயிரக்கணக்கில் வரக்கூடிய சூழல் உருவாகலாம். அவர்களை எதிர் கொள்ள த-ழக அரசு இயந்திரம் தயாராக இருக்கிறதா?
பதில்:- அதற்கு பதில் சொன்னால் அவர்களை வாருங்கள் என்று அழைப்பதைப்போல ஆகி விடும்.
கேள்வி:- அகதிகள் வரும்போது தீவிரவாதிகளும் ஊடுருவி வரும் வாய்ப்” ஏற்படலாம் அல்லவா?
பதில்:- அதில் கவனம் செலுத்த வேண்டும் என்று காவல் துறைக்கு சொல்லப்பட்டுள்ளது. அதைச் சலித்து அனுப்”ம் போது போலீஸ் -கவும் கவனமாக இருப்பார்கள். அதிலும் நழுவி தீவிரவாதிகள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
கேள்வி:- தாங்கள் இன்றைய தினம் எழுதியுள்ள தீர்மானத்தில் -கவும் கவனமாக கோரிக்கை வைத்திருப்பதைப் போல தெரிகிறதே?
பதில்:- நன்றி
கேள்வி:- இதற்கு காரணம் முதல்-அமைச்சர் என்பதாலா?
பதில்:- கருணாநிதியாக இருப்பதால்.
கேள்வி:- சரத்குமார் பதவி விலகிய இடத்திற்கு ஜுலை மாதம் 13-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று செய்தி வந்திருக்கிறதே? அதைப்பற்றி முடிவு செய்துவிட்டீர்களா?
பதில்:- இன்னும் முடிவாகவில்லை.
கேள்வி:- வேலூர் சிறையிலே உள்ள ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளான முருகன், நளினி போன்றவர்கள் 6 நாட்களாக தங்கள் மகளுக்கு விசா வழங்க வேண்டும் என்று கோரி உண்ணாவிரதம் இருக்கிறார்களே?
பதில்:- த-ழக அரசுக்கு அதிலே சம்பந்தம் இல்லை என்று கருதுகின்றேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.