நடுவானில் மயங்கினார் பைலட் விமானத்தை தரையிறக்கிய டீன் ஏஜ் இளைஞன்

Read Time:3 Minute, 4 Second

Ani.Flight-Heliகுட்டி விமானத்தில் ஜாலி பயணம் மேற்கொண்டபோது பைலட் மயங்கியதால், உடன் சென்ற இளைஞர் விமானத்தை 45 நிமிடங்கள் இயக்கிய பின் பாதுகாப்பாக தரையிறக்கிய சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் போர்ப்ஸ் நகர விமான நிலையத்திலிருந்து செசன்னா-150 என்ற குட்டி ரக ஒற்றை இன்ஜின் விமா னம் நேற்று புறப்பட்டது.

அதை தேரக் நெவிலி (61) என்ற பைலட் இயக்கினார். உடன் ட்ராய் ஜென்கின்ஸ் (19) என்ற இளைஞனும் சென்றான். இருவரும் அடிக்கடி இந்த குட்டி விமானத்தில் ஜாலி பயணம் மேற்கொள்வது வழக்கம்.

அப்போது விமானம் ஓட்டுவது பற்றி அரைகுறையாக ஜென்கின்ஸ்க்கு கற்றுக் கொடுத்துள்ளார். விமானத்தில் நேற்று பறந்து கொண்டிருந்தபோது, பைலட் நெவிலிக்கு திடீர் என மயக்கம் ஏற்பட்டது.

நிலைமையை உணர்ந்த ஜென்கின்ஸ் விமானத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தான். விமானத்தை இயக்குவது பற்றி தெரிந்திருந்தாலும், அதை தனியாக தரையிறக்கும் அளவுக்கு ஜென்கின்ஸ் பயிற்சி பெறவில்லை.

ஒரே ஒரு முறை நெவிலி மேற்பார்வையில் விமானத்தை தரையிறக்கி உள்ளான். இதனால் ”ஹெல்ப், ஹெல்ப்” என விமானத்தில் உள்ள ரேடியோ மைக்கில் கத்தினான் ஜென்கின்ஸ்.

இதைகேட்டு மற்றொரு விமா னத்தில் பறந்து கொண்டிருந்த பால் ரெனால்ட்ஸ் என்ற விமானி, குட்டி விமானத்தின் அருகில் பறந்தபடி ரேடியோ மூலம் ஜென்கின்ஸ்க்கு சில அறிவுரைகளை வழங்கினார். அதனால் 2 ஆயிரம் அடி உயரத்தில் விமான நிலையத்தை சுற்றி விமானம் வட்டமடித்துக் கொண்டிருந்தது.

விமானம் விபத்துக்குள்ளானால் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட ஒரு குழுவினர் தயாராக இருந்தனர். இந்நிலையில் பைலட் நெவிலிக்கு மயக்கம் தெளிந்தது.

அவரது அறிவுறுத்தலின்படி விமானத்தை, விமான நிலைய ஓடுபாதையில் பத்திரமாக தரையிறக்கினான் ஜென்கின்ஸ்.விமானத்தை இயக்கு வது பற்றி சிறிதளவு தெரிந் திருந்தாலும் தைரியமாக செயல்பட்ட வாலிபரை பொதுமக்கள் பாராட்டினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவியை தாக்கியதாக ஐ.ம.சு.கூ உறுப்பினர் மீது குற்றச்சாட்டு
Next post கடலாமை பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சிக்காக வந்திருந்த ஆஸி. யுவதி மீது வல்லுறவு