(PHOTOS) அதிகாரப் பகிர்வு வேறு, 13 ஆவது திருத்தச் சட்டம் வேறு : முதலமைச்சர்

Read Time:1 Minute, 55 Second

tna.vic-02அதிகாரப் பகிர்வு என்பது ஒரு விடயம் 13 ஆவது திருத்தச்ச சட்டம் என்பது இன்னொரு விடயம் வடக்கு கிழக்கு அச் சட்டத்தின் கீழ் மாகாண சபையாக உருவாக்கப்பட்டது என முதலமைச்சர் தெரிவித்தார்.

வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கான அரசியலமைப்புக் கற்கை கருத்தரங்கு இன்று மதியம் 2 மணியளவில் யாழ் பொது நூலகத்தில் நடைபெற்ற போது முதலமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இந் நிகழ்வு வட மாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.

மேலும் இதன் போது உரையாற்றிய முதலமைச்சர்,

இதன் போது மாகாண சபைக்கான எந்தவொரு அதிகாரங்களும் இது வரை வழங்கப்படவில்லை. மாறாக 13 ஐ திருத்தியமைக்க முயல்கின்றனர்.

இதற்கு இந்தியா உட்பட பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பைத் தெரிவித்ததை சுட்டிக்காட்டினார்.

அதிகாரப் பகிர்வு என்பதை இந்த அரசாங்கம் ஒரு கையால் கொடுத்து மறு கையால் பறிக்கின்றது என்று தெரிவித்தார்.

மேலும் 13 ஆவது திருத்தம் மற்றும் அரசியலமைப்பு அதிகாரங்கள் தொடர்பான விரிவுரையை வைத்திய கலாநிதி மாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கினார்.

நிகழ்விற்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வைத்தியர், ஜெயம்பதி விக்கரமரட்ண மற்றும் மாகாணசபையின் ஆளும்ட கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

008f

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வட மாகாணசபையை இயங்கச் செய்வது அரசின் நோக்கமல்ல- இரா. சம்பந்தன்
Next post வடக்கு மாகாண சபையின் அடுத்த அமர்வு மாசி 18இல்