மன்னார் மனித புதைகுழி; வட மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றம்

Read Time:1 Minute, 51 Second

mannar-mandaiமன்னார் மனித புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வட மாகாண சபையின் இன்று பிரேரணையொன்றை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தபுதைகுழி விடயத்தில் மேற்கொள்ளப்பட்ட உள்ளக விசாரணைகளும் இரசாயன பகுப்பாய்வும் ஜக்கிய நாடுகளின் மேற்பார்வைக்குழுவின் உதவியுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பிரேரணையொன்றை முன்வைத்தார்.

குறித்த பிரேரணையை சமர்ப்பித்து அங்கு உரையாற்றிய அனந்தி,

‘மூன்றாவது முறையாக ஜெனீவா மனித உரிமைகள் மாநாடு நடைபெறவுள்ளதனால் முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது இன அழிப்பு என்பதனை நிரூபிக்க வேண்டும்.

மாவட்ட செயலாளர்களின் புள்ளிவிபரங்களில் காணாமல் போனவர்களின் நிலையை ஆராயும் வகையிலும் அரசின் தற்போதைய நீதியற்ற கணக்கெடுப்பிற்கு மாறாக மாகாண சபையினால் சர்வதேசத்தின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டு உண்மையான கணக்கெடுப்பு சர்வதேசத்திற்கு தெரியப்படுத்தப்பட வேண்டும்’ என்றார்.

இந்த பிரேரணையை மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் வழிமொழிந்தார். இதனையடுத்து இந்த இந்த தீர்மானம் எந்தவித எதிர்ப்புமின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வடக்கு மாகாண சபையின் அடுத்த அமர்வு மாசி 18இல்
Next post (PHOTOS) பங்களாதேஷ் உலக முஸ்லிம் மாநாட்டில் கலந்து கொள்ள ரயிலில் பயணித்த மக்கள்