வடக்கு மாகாண சபையின் அடுத்த அமர்வு மாசி 18இல்

Read Time:1 Minute, 24 Second

15507f45cd635bee7456ee7c8fdb4aa1வடமாகாண சபையின் அடுத்த அமர்வுகள் பெப்ரவரி 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 நடைபெறவுள்ளதாக அவைத்தலைவர் க.சிவஞானம் அறிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் 5ஆவது அமர்வு இன்று கைதடியில் உள்ள வடமாகாண சபைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் நிறைவின் போதே அவைத்தலைவர் இதனை அறிவித்திருந்தார்.

எனினும் தமிழர் திருநாளாம் தைத்திருநாள் கொண்டாடப்பட்டு முதல் தடவையாக இன்று மாகாண சபை அமர்வு நடைபெற்றது.

அதனை ஒரு மங்கள கரமானதாக ஆரம்பிக்க வேண்டும் என்ற கல்வி அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க அவரின் ஏற்பாட்டில் மங்கள வாத்தியங்கள் முழங்கியது.

அத்துடன் வாத்தியங்களை இசைத்தவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து இன்று காலை 9.45மணியளவில் சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது. இன்றை அமர்வில் ஆளும் கட்சி உறுப்பினர்களான கே.சயந்தன், பசுபதிப்பிள்ளை ஆகியோர் சமூகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (PHOTOS) அதிகாரப் பகிர்வு வேறு, 13 ஆவது திருத்தச் சட்டம் வேறு : முதலமைச்சர்
Next post மன்னார் மனித புதைகுழி; வட மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றம்