கிரீஸ் நாட்டில் 5.8 ரிக்டர் அளவுக்கு கடுமையான நிலநடுக்கம்

Read Time:1 Minute, 44 Second

0a0a4110-1cd5-4001-8460-6d3bb2e7e9bd_S_secvpfகிரீஸ் நாட்டின் தீவின் ஐயோனியன் கடல் பகுதியான செபலோனியாவில் 5.8 ரிக்டர் அளவுகோலுக்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சேதாரம் குறித்து இதுவரை எத்தகவலும் வெளியாகவில்லை.

இந்திய நேரப்படி இரவு 7 மணியளவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தலைநகர் ஏதென்ஸிலிருந்து 280 கி.மீ தோலைவில் உள்ள இப்பகுதியில் கடலுக்கு கீழே 6 கிலோமீட்டர் தொலைவில் இந்நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலைகள் கடுமையாக சேதமடைந்ததாகவும், பாறைகள் சாலைகளில் வந்து விழுந்ததாகவும், அங்குள்ள பழைய வீடுகளின் கூறைகள் இடிந்து விழுந்ததாகவும் நிகோஸ் ட்சோங்காஸ் என்ற அதிகாரி தெரிவித்தார். அங்குள்ள அர்கோஸ்டோலி பகுதியில் உள்ள கடைகளில் ஜன்னல்கள் உடைபட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலநடுகத்திற்கு பின் மேலும் சில சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்நாட்டு பிரதமர் அண்டோனிஸ் சமாராஸ் உள்துறை அமைச்சரான யியான்னிஸ் மிஹெலாக்கிசை அப்பகுதியை உடனடியாக பார்வையிடுமாறு உத்தரவிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகருடன் ஜோடியாக நடிக்க மறுத்த நாயகிகள்!
Next post வட மாகாணசபையை இயங்கச் செய்வது அரசின் நோக்கமல்ல- இரா. சம்பந்தன்