பதுங்கு குழுயிலிருந்து தப்பித்து 1984 வரை பிரேஸிலில் வாழ்ந்தார் ஹிட்லர்

Read Time:3 Minute, 10 Second

3965_newsthumb_Thumபதுங்கு குழுயிலிருந்து தப்பித்து 1984 வரை பிரேஸிலில் வாழ்ந்தார் ஹிட்லர் : புகைப்படமொன்றுடன் பரபரப்பு தகவல்கள் வெளியிட்டுள்ள புதிய புத்தகம்…
2 ஆம் உலக யுத்தத்தில் ஜெர்மனி தோல்வியடைந்ததை உணர்ந்த சர்வாதிகாரியான ஹிட்லர் 1945ஆம் ஆண்டு பேர்லின் பதுங்கு குழியில் வைத்து தன்னைத் தானே சுட்டுக்கொண்டு காதலியுடன் இறந்ததாக நம்பப்படுகின்றது.


ஆனால் அடோல்ப் ஹிட்லர் பதுங்கு குழியிலிலிருந்து தப்பித்து பிரேஸிலுக்கும் பொலிவியாவுக்குமிடையிலுள்ள சிறிய நகரொன்றில் வாழ்ந்ததாக புகைப்படமொன்றுடன் புதிய பல பரபரப்புத் தகவல்களை புதிய புத்தகமொன்று வெளியிட்டுள்ளது.

ஸிமோனி ரெனீ குரேரியோ டயஸ் என்ற முதுகலை பட்டதாரி மாணவி எழுதிய ‘ஹிட்லர் இன் பிரேஸில்’ (பிரேஸிலில் ஹிட்லர்) எனும் புத்தகத்திலேயே ஹிட்லர் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘ஹிட்லர் பிரேஸில் தனது இருப்பிடத்தை அமைத்துக்கொள்வதற்கு முன்னர் ஆர்ஜென்டீனா பின்னர் பரகுவே சென்று புதைக்கப்பட்டுள்ள பெறுமதிவாய்ந்த பொருட்களை தேடும் வேட்டையில் ஈடுபட்டள்ளார்.

வத்திகானைச் சேர்ந்த குழுவொன்று இதற்கான வரைபடத்தை அவரிடம் கொடுத்துள்ளது.’ என புத்தகத்தின் உரிமையாளர் நம்புகின்றார்.

அதுமட்டுமன்றி, 80களில் ஹிட்லர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் வத்திகானின் கட்டளையின் படி இங்கு இருப்பதாக கூறினாராம்.

பிரேஸிலில் கடிங்கா எனும் கறுப்பின பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், அடோல்ப் லெய்ப்ஷிக் எனும் பெயரில் வாழ்ந்த ஹிட்லர் 1984 ஆம் ஆண்டு 95 வயதிலேயே இறந்ததாகவும் நொஸா ஸென்கொரொ எனும் இடத்திலே அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் ஸிமோனி ரெனீ இது குறித்து மரபியல் சோதனைகள் மேற்கொண்டு உறுதிப்படுத்தவும் திட்டமிட்டுள்ளார்.

ஹிட்லரின் உடல் கண்டுபிடிக்கப்படாததால் அவரது மரணம் குறித்து இவ்வாறான பரபரப்பு தகவல்கள் வெளியாவது புதிதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமலையில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்
Next post இரண்டு கதைகள் ஒரே படம்; இது கதிர்வேலன் காதல்