வெளிநாடுகளில் உள்ள, விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கு எதிராக வழக்கு!!

Read Time:3 Minute, 26 Second

ltte.forign-001வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு எதிராக, அவர்கள் தற்போது வசித்து வரும் நாடுகளில் வழக்குகளை தாக்கல் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள போர் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலாகவே இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது.

இலங்கையில் பஸ்களில் குண்டு வைத்து சுமார் 120 பொதுமக்களை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய புலிகளின் ஆதரவாளர்கள், ஐந்து நாடுகளில் இருப்பதாகவும் அவர்களுக்கு எதிராகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

வழக்கில் சாட்சியமளிக்க 100 பேர் முன்வந்துள்ளனர். கொழும்பு கோட்டை ரெயில் நிலையம், வெலிவேரிய, நுகேகொட, நோலிமிட், பிலியந்தல, கல்கிஸ்சை, கொப்பிடிக்கொல்லாவ, தும்புள்ள, அம்பானபுர போன்ற இடங்களில் பஸ்ஸில் புலிகள் வைத்த குண்டுகளால் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.

இலங்கை அரசாங்கம், வெளிநாடுகளில் புலிகளின் உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வது இதுவே முதல் முறையாகும்.

புலிகளின் இந்த குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக புலனாய்வு பிரிவின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் லயனல் முனசிங்க, சாட்சியாளர்களிடம் வாக்குமூலங்களை பெற்றுள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தரப்புத் தகவல்கள் தெரிவித்தன.

கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவின் ஊடாகவே இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட உள்ளன.

விடுதலைப் புலிகள், பொதுமக்களை கொலை செய்தனர் என்று அறிந்து அவர்களுக்கு ஆதரவு வழங்கி வந்த இம்மானுவேல் ஆண்டகை, அடேல் பாலசிங்கம், விஸ்வநாதன் ருத்ரகுமாரன், நெடியவன், கெரி. ஆனந்தசங்கரி, ஏ. கிருபாகரன், சுரேன் சுரேந்திரன் ஆகியோருக்கு எதிராகவே இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட உள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவித்தன.

குண்டு வைப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய 16 புலிச் சந்தேக நபர்களை அரசாங்கம் கைது செய்துள்ளதுடன் அவர்கள் இந்த சம்பவங்கள் தொடர்பில் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

அமெரிக்கா, நோர்வே, பிரித்தானியா, கனடா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட உள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் தீ விபத்து: 6 பேரை காப்பாற்றிய 8 வயது சிறுவன் பலி
Next post 15 நிமிடத்தில் 40 பிளேட் நூடுல்ஸ் சாப்பிட்டு சாப்பாட்டு ராமன் பட்டம் வென்ற சீனர்