அமெரிக்காவில் தீ விபத்து: 6 பேரை காப்பாற்றிய 8 வயது சிறுவன் பலி

Read Time:2 Minute, 5 Second

4edfஅமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள கிழக்கு ரோசெஸ்டர் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவன் டைலர் தூகன். இவன் பென்பீல்டு நகரில் தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்தான்.

அந்த வீட்டில் நடமாடும் படுக்கை அறை உள்ளது. நேற்றுமுன்தினம் இரவு அந்த படுக்கை அறையில் திடீரென தீப்பிடித்தது.

உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே டைலர் தூகன் அதிவிரைவாக செயல்பட்டான். எரிந்து கொண்டிருந்த நெருப்புக்குள் பாய்ந்து சென்றான்.

தீயில் சிக்கியிருந்த 6 பேரை பத்திரமாக மீட்டு வெளியே அழைத்து வந்தான். அவர்களில் 2 பேர் குழந்தைகள். அவர்களின் வயது தலா 4 மற்றும் 6 ஆகும்.

ஆனால் அவனது தாத்தா மட்டும் தீயில் சிக்கி கொண்டார். உடல் ஊனமுற்று இருந்ததால் படுக்கையில் இருந்த அவரால் வெளியே வர முடியவில்லை.

எனவே தாதாவை தூக்கி கொண்டு வெளியே வர முயன்ற போது புகை மூட்டம் மற்றும் தீயில் சிக்கினான். இதனால் உடல் கருகி பரிதாபமாக இறந்தான்.

சிறிய வயதில் 6 பேரை காப்பாற்றிய சிறுவன் டைலர் தூகனின் வீரதீரசெயலை அப்பகுதி மக்கள் பாராட்டினார்கள். அதே நேரத்தில் அவன் மரணம் அடைந்ததற்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளனர்.

தூகன் இறுதி சடங்குக்கும், அவனது குடும்பத்தினருக்கு உதவும் வகையிலும் ஆன்லைனில் நிதி திரட்டுகின்றனர். இதுவரை ரூ. 17 லட்சம் நிதி சேர்ந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நுளம்பு வலை கயிற்றில் சிக்கி, கிளிநொச்சி சிறுமி மரணம்
Next post வெளிநாடுகளில் உள்ள, விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கு எதிராக வழக்கு!!