மத்திய கிழக்கில் பணி புரிந்த மகளை இழந்த நான், மகனையும் இழந்துள்ளேன்..
“எனது மூத்த மகள் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் வீட்டு பணிப்பெண்ணாக கடமையாற்றிய போது அந்த வீட்டிலிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவரது சாம்பரைக் கூட நாங்கள் காணவில்லை.
அவரை இழந்து நின்ற நாங்கள் இன்று எமது மகனையும் இழந்து அவரின் சடலத்தினையும் காணமுடியாது உள்ளது இவ்வாறானதொரு நிலைமை எந்த தாய்க்கும் ஏற்படக் கூடாது என வேறு எந்த தாய்க்கும் ஏற்படாத நிலை என” சார்ஜாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட கொம்மாதுறையினை சேர்ந்த கிருஷ்ணபிள்ளை ரவீந்திரனின் தாயாரான நாகரெட்னம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஐந்தாம் திகதி சார்ஜர் சென்று சிறையில் எனது மகனை சந்தித்தபோது தான் நிரபராதியெனவும் தன்னைக் காப்பாற்றும்படியும் எங்களிடம் மன்றாடினார்.
தன்னை தனது எஜமானாரும் வேறு மூவரும் இணைந்து பாலைவனப் பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு அவர்கள் மது அருந்திக் கொண்டிருந்தபோது தன்னை ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாகவும் அவர்களிடமிருந்து தப்புவதற்காக காரை எடுத்து ஓட முயன்றபோது இந்த விபத்து சம்பவம் நிகழ்ந்ததாகவும் எனது மகன் தெரிவித்தார்.
இது தொடர்பாக கண்ணீர் மல்க அவர் மேலும் தெரிவிக்கையில்..
“2006 ஆம் ஆண்டு காரினால் ஒருவரை மோதி கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த 21 ஆம் திகதி அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்ட எனது மகன் ஒரு நிரபராதி.
எங்களது வீட்டின் வறுமை நிலைமை காரணமாகவே தங்களது பிள்ளைகளை வெளிநாடு அனுப்பினோம். ஆனால் அவர்கள் பிணங்களானமை தமக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனது மூத்த மகள் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் வீட்டு பணிப்பெண்ணாக கடமையாற்றிய போது அந்த வீட்டில் இருந்து சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவரது சாம்பரைக் கூட நாங்கள் காணவில்லை.
அவரை இழந்து நின்ற நாங்கள் இன்று எமது மகனையும் இழந்து அவரின் சடலத்தினையும் காணமுடியாதது வேறு எந்த தாய்க்கும் ஏற்படாத நிலை” என்றார்.
கடந்த ஐந்தாம் திகதி துபாய் சென்று சிறையில் எனது மகனை சந்தித்தபோது தான் நிரபராதியெனவும் தன்னைக் காப்பாற்றும்படியும் எங்களிடம் மன்றாடினார்.
தன்னை தனது எஜமானாரும் வேறு மூவரும் இணைந்து பாலைவனப்பகுதிக்கு அழைத்துச்சென்று அங்கு அவர்கள் மது அருந்திக் கொண்டிருந்த போது தன்னை ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாகவும் அவர்களிடம் இருந்து தப்புவதற்காக காரை எடுத்து ஓட முயன்ற போது இந்த விபத்து சம்பவம் நிகழ்ந்ததாகவும் தெரிவித்தார்.
அவரை கைது செய்த பொலிஸாரிடமும் இதனை தெரிவித்துள்ளார். ஆனால் இவருக்கு பத்து வருடங்கள் சிறைத்தண்டனை என்றே தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் அது திடீரென மாற்றப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
இதேவேளை, “சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினரை சந்தித்து மன்னிப்புக்கோரி தனது சகோதரனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்துவதற்காக உயிரிழந்தவரின் குடும்பத்தினரை சந்திக்க முயற்சி செய்த போதும் நாங்கள் ஏமாற்றப்பட்டோம்” என மரண தண்டனை விதிக்கப்பட்டு உயிரிழந்த ரவீந்திரனின் சகோதரியான கோமளாவதி தெரிவித்தார்.
“எனது சகோதரன் எமது குடும்ப நிலைமை காரணமாகவே வெளிநாட்டுக்காக தொழிலுக்காக சென்றார். இன்று அவரது மனைவியினைக்கூட அவரது சடலத்தினை பார்க்க அனுமதிக்கவில்லை.
இந்த கொலையில் எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் பல்வேறு தரப்பினரிமும் முறையிட்டும் எமக்கு நீதி கிடைக்கவில்லை.
எங்களது சகோதரனின் உடலையாவது இங்கு கொண்டுவர நடவடிக்கையெடுக்கவேண்டும். இது தொடர்பில் பல்வேறு தரப்பினரிடமும் முறையிட்டுள்ளோம்.
ஆனால் எதுவித சாதகமான பதில்களும் கிடைக்கவில்லை. எங்கள் சகோதரனின் முகத்தினை கடைசி ஒரு தடவையாவது பார்க்க ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர்.
மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொம்மாதுறையானது மட்டக்களப்பு வாழைச்சேனை மட்டக்களப்பு பிரதான வீதியில் வந்தாறுமூலையில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு அடுத்ததாகவுள்ள கிராமமாகும்.
மிகவும் வறிய மக்கள் வாழும் கிராமமான இங்கிருந்து அதிகளவான இளைஞர் யுவதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரிந்து வருகின்றனர்.
இங்கு கிருஷ்ணபிள்ளை நாகரெட்னம் தம்பதியினரின் மூன்றாவது பிள்ளையாக ரவீந்திரன் இருந்துவருகின்றார்.
இவர்கள் குடும்பத்தில் 11 பிள்ளைகள். இவர்களில் ஒருவர் 1988ஆம் ஆண்டு காலப்பகுதியில் இப்பகுதியில் செயற்பட்ட ஆயுதக்குழுவினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
மூத்த பெண் மத்திய கிழக்கு நாடொன்றில் 1990ஆம் ஆண்டு கடமையாற்றி வந்த நிலையில் வீட்டில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்துள்ளார்.
Average Rating