மனித புதைகுழியை பார்வையிட, செல்வம் எம்.பி.க்கு அனுமதி மறுப்பு

Read Time:1 Minute, 53 Second

SELVAM_TWOமன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தோண்டும் பணிகள் வெள்ளிக்கிழமை காலை முதல் இடம்பெற்று வந்த நிலையில் குறித்த மனித புதைகுழியினை பார்வையிடுவதற்காக அவ்விடத்திற்கு சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

குறித்த மனித புதைகுழி தோண்டும் நடவடிக்கைககள் ஆரம்பிக்கப்பட்ட போது பல அரசியல்வாதிகள் அங்கு சென்று பார்வையிட்டு வந்தனர்.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவ்விடத்திற்கு சென்ற போது பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினரின் வருகை தொடர்பில் பொலிஸாரினால் நீதவானிடம் தெரியப்படுத்திய போதும் நீதவான் அரசியல்வாதிகளுக்கான அனுமதியை வழங்கவில்லை.

இதனால் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் திருப்பி அனுப்பப்பட்டார்.

இதேவேளை கடந்த வாரம் குறித்த மனித புதைகுழி பகுதிக்குச் சென்ற வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி என்.குணசீலனுக்கும் புதைகுழியை பார்வையிடுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டு அவரும் திருப்பி அனுப்பப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாய் போன்று குரைக்கும் ஆடு
Next post நடிகை ஷீன ஷஹபடி (அவ்வப்போது கிளாமர் படங்கள்)