மிஷெல் ஒபாமாவின் பிறந்த தின விழாவில் பியோன்ஸேயின் இசை நிகழ்ச்சி

Read Time:5 Minute, 52 Second

3896_newsthumb_Thumஅமெரிக்க முதற்பெண்மணி மிஷெல் ஒபாமாவின் 50 ஆவது பிறந்த தினவிழாவில் பிரபல பொப்பிசைப் பாடகி பியோன்ஸே நோவெல்ஸ் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார். கடந்த 17  ஆம் திகதி வெள்ளிக்கிழமை தனது 50 ஆவது பிறந்த தினத்தை மிஷெல் ஒபாமா கொண்டாடினார்.

அமெரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியாக பராக் ஒபாமா விளங்கும் நிலையில், அந்நாட்டின் முதற்பெண்மணி அந்தஸ்துபெற்ற  முதல் கறுப்பினத்தவரக மிஷெல் ஒபாமா விளங்குகிறார்.

இப்பின்னணியில், வெள்ளை மாளிகையில் வசிக்கும் காலத்தில் அவருக்கு 50 வயது பூர்த்தியடைந்தமை தொடர்பான செய்திகளுக்கு அமெரிக்காவின்  பல்வேறு ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்தன.

50 வயதுக்கு மேற்பட்ட அமெரிக்கர்களுக்கான  யுயுசுP  எனும் அமைப்பில் தான் இணைந்ததையும்  மிஷெல் ஒபாமா பெருமையுடன் அறிவிக்கும் விதமாக அவ்வமைப்பின் அங்கத்துவ அட்டையை வெளியிட்டிருந்தார்.


அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கும் அவரின் பாரியார் மிஷெல் ஒபாமாவுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் ஒபாமாவின் ஜனாதிபதி பதவிக்காலம் முடிந்தவுடன் அவரை மிஷெல் ஒபாமா விவாகரத்து செய்யவுள்ளதாகவும் ஊகங்கள் வெளியாகியிருந்த நிலையில் இப்பிறந்த தினக் கொண்டாட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இப்பிறந்த தின விழா  தொடர்பான தகவல்களை  வெள்ளை மாளிகை உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை.

எனினும் கலைத்துறை நட்சத்திரங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் உட்பட 300 இற்கும் அதிகமான விருந்தினர்கள் இதில் கலந்துகொண்டதாக நிகழ்வில் கலந்துகொண்டதாக அதில் பங்குபற்றியவர்கள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உப ஜனாதிபதி ஜோ பிடென், அமெரிக்காவின் முன்னாள் ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன், முன்னாள் கூடைப்பந்தாட்ட நட்சத்திரம் மெஜிக் ஜோன்ஸன், முன்னாள் கால்பந்தாட்ட வீரரும் விளையாட்டுத்துறை தொலைக்காட்சி ஒளிபரப்பாளருமான அஹமட் ரஷாட், கூகுள் நிறுவனத்தின் நிறைவேற்றதிகாரத் தலைவர் எரிக் ஸ்மித் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டவர்களில் அடங்குவர்.

இப்பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக பிரபல பாடகி பியோன்ஸே நோவெல்ஸின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

32 வயதான பாடகி பியோன்ஸே நொவெல்ஸும் அவரின் கணவரான பிரபல பாடகர் ஜே இஸட்டும்  ஒபாமா தம்பதியின் நெருங்கிய நண்பர்களாக விளங்குகின்றனர்.

கடந்த வருடம் பராக் ஒபாமா  இரண்டாவது தடவையாக  ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்தபோது அந்நிகழ்வில் தேசிய கீதம் பாடுவதற்கு பியோன்ஸே நொவெல்ஸ் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பராக் ஒபமாவின் நாயுடன் தான் பிடித்துக்கொண்ட புகைப்படம் உட்பட வெள்ளை மாளிகையில் தனர் பிடித்துக் கொண்ட பல புகைப்படங்களை பியோன்ஸே வெளியிட்டுள்ளார்.

மிஷெல் ஒபாமாவின் பிறந்த தின விழாவின்போது தனது  கணவர் ஸே இஸட்,  மகள் ஆகியோருடன் பியோன்ஸே நொவெல்ஸ் வெள்ளை மாளிகைக்கு வந்தார்.

வொஷிங்டன் டிசி நகரில் நடக்கும் இவ்வருடத்தின் மிகப்பெரிய விருந்துகளில் ஒன்று இது என நிகழ்வில் கலந்துகொண்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.

இப்பிறந்த தினவிழாவுக்கு அழைக்கப்பட்ட விருந்தினர்கள் உணவு கொண்டு விட்டு வரவேண்டும் எனவும்  வைபவத்தின் போது, பானங்களும் சிற்றுண்டிகளும் மாத்திரமே வழங்கப்படும் என அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்ததாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஆனால், விழாவில் கலந்துகொண்டவர்கள் எவரும் இந்த உணவுத் தெரிவு குறித்து அலட்டிக்கொண்டதாகத் தெரியவில்லை எனவும் 50 வயதிலும் மிஷெல் ஒபாமா எவ்வாறு இளமையாக தோற்றமளிக்கிறார்.

ஜனாதிபதி பராக் ஒபாமா எந்தளவு தனது மனைவியை நேசிக்கிறார் என்பது போன்ற விடயங்கள் குறித்து பேசுவதிலேயே அவர்கள் அக்கறை செலுத்தினர் எனவும்  என அதில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதைக்குழி பிரதேசம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது: இராணுவ தளபதி
Next post பிரபுதேவாவை மன்னிக்க முடியாது… நயன்தாரா