வட­மா­காண பிர­தம செய­லா­ளரை இட­மாற்ற அர­சாங்கம் மறுப்பு

Read Time:3 Minute, 5 Second

Wijaya Ludsumiவட­மா­காண சபையின் பிர­தம செய­லாளர் என். விஜ­ய­லட்சுமியை அந்­தப்­ ப­த­வி­யி­லி­ருந்து இட­மாற்­று­வ­தற்கு அர­சாங்கம் திட்­ட­­வட்­ட­மாக மறுப்பு தெரி­வித்­துள்­ளது.

யாழ்ப்­பாணம் தெல்­லிப்­பழை புற்­றுநோய் வைத்­தி­ய­சா­லையின் திறப்பு விழா வைபவம் நேற்று நடை­பெற்­றது.

இந்த நிகழ்வில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ச, வட மாகாண முத­ல­மைச்சர் சீ.வி.விக்­கி­னேஸ்­வரன் உட்­பட ஆளும்­கட்சி, எதிர்க்­கட்சி எம்.பி.க்கள் மற்றும் முக்­கி­யஸ்­தர்கள் கலந்­து­ கொண்­டனர்.

நிகழ்வில் பங்­கேற்ற முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் பிர­தம செய­லாளர் விவ­காரம் குறித்து குறிப்­பிட்­ட­தா­கவும், இதற்கு ஜனா­தி­பதி தரப்பு சாத­க­மான பதில் வழங்­க­வில்­லை­யென்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

பிர­தம செய­லாளர் விஜ­ய­லட்­சு­மியை இட­மாற்றும் விட­யத்தில் இலங்கை நிர்­வாக சேவை அதி­கா­ரிகள் சங்கம் பெரும் எதிர்ப்பு தெரி­வித்து வரு­கின்­ற­மை­யினால் இந்த விட­யத்தை மேற்­கொள்ள முடி­யாத நிலை காணப்­ப­டு­கி­றது.

எனவே, இந்தக் கோரிக்­கை­யினை கைவி­டு­மாறு ஜனா­தி­பதி தரப்பு தெரி­வித்­துள்­ள­தா­கவும் நம்­ப­க­ர­மாக தெரி­ய­வ­ரு­கின்­றது.

மாகாண அமைச்­சர்­களின் செய­லா­ளர்­களை .ே வண்­டு­மானால் இட­மாற்ற முடியும். அதற்­கான நட­வ­டிக்­கை­களை எடுக்­கலாம். ஆனால் பிர­தம செய­லா­ளரை மாற்­று­வது கடினம் என தெரி­வித்த ஜனா­தி­பதி தரப்பு வட­மா­காண சபையின் செயற்­பாட்­டுக்கு பூரண ஒத்­து­ழைப்பு வழங்­கப்­படும் என்று தெரி­வித்­துள்­ளது.

இம்­மாத ஆரம்­பத்தில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்சவை சந்­தித்து பிர­தம செய­லா­ளரின் இட­மாற்றம் உட்­பட பல விடங்கள் .தொடர்பில் வட­மா­காண முத­ல­மைச்சர் சீ.வி.விக்­கி­னேஸ்­வரன் கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தார். இதன்­போது பிர­தம செய­லா­ளரை இட­மாற்­று­வ­தற்கு ஜனா­தி­பதி இணக்கம் தெரி­வித்­தி­ருந்தார்.

இந்த நிலை­யி­லேயே நேற்று இந்த விடயம் குறித்து முத­ல­மைச்சர் குறிப்­பிட்­ட­ போது அதற்கு மறுப்பு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post “கே.பி.” நடத்தும், “செஞ்சோலை” சிறுவர் இல்லத்தின் 1-வது ஆண்டு நிறைவு!
Next post டுவிட்டர் இணைய தளத்தில், விஜய்யை அவதூறாக திட்டியவர் போலீசில் சிக்கினார்