வைகறையின் சேவை நேற்று முதல் ஆரம்பம்

Read Time:1 Minute, 37 Second

tna.vick-04வவுனியாவில் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான சுகாதார பராமரிப்பு நிலையமொன்று வடமாகாண முதலமைச்சரினால் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா பம்பைமடு ஆயுர்வேத வைத்தியசாலை வளாகத்திலேயே இந்த கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிலையத்தில், முதற்கட்டமாக 20 பேரிற்கு சிகிச்சையளிக்க கூடிய வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடமாகாண சுகாதர அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் அவர்களின் முயற்சியால் அமைக்கப்பட்ட இந்நிலையமானது, குறிப்பாக இறுதி யுத்தத்தின் போது முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு தாமாக இயங்க முடியாமல் உள்ளவர்களுக்கான சிகிச்சை வழங்கும் நிலையமாகும்.

இந்த நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்கள், சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மகளை மிரட்டி பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய கொடூர தந்தை கைது
Next post யாழ்ப்பாணத்தில் இரு மகள்மார் தந்தையால் பாலியல் துஷ்பிரயோகம்