கட்டுக்கட்டாக 13 கோடி ரூபாயை தெருவில் அடுக்கி வினியோகம்

Read Time:1 Minute, 48 Second

006சீனாவில் விவசாயிகள் ரூ.13 கோடி பண கட்டுகளை கொண்டு 6 மீட்டர் தூரத்துக்கு சுவர் எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் தென்மேற்கே உள்ள லியாங்சன் கவுன்டி என்ற இடத்தில் ஏராளமான விவசாயிகள் வசிக்கின்றனர்.

அங்குள்ள கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த கூட்டுறவு சங்கம் மூலமாக சுமார் 340 குடும்பத்தினர் பழங்கள், காய்கறிகள் உள்பட விவசாய பொட்களை விற்பனை செய்து வருகின்றனர். இதன்மூலம் சுமார் ரூ.13 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு கிடைத்த லாப தொகை ரூ.13 கோடியை ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் அந்த கிராமத்துக்கு நேற்று எடுத்து வந்தனர்.

அவற்றை உறுப்பினர்களுக்கு மறுநாள் பிரித்து கொடுக்கும் வரையில் பாதுகாப்பாக வைக்க போதிய இடம் இல்லை. எனவே, தெருவிலேயே சுமார் 6 மீட்டர் நீளத்துக்கு பணக் கட்டுகளை சுவர் போல் அடுக்கி வைத்தனர்.

பின்னர் காலை வரை அதை பாதுகாக்க 7 ராணுவ வீரர்கள் அதன் மீதே படுத்துறங்கினர். காலையில் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் அந்த பணத்தை பிரித்து கொடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post த்ரிஷாவின் புதிய காதலன் யார்?
Next post ’13ம் பக்கம் பார்க்க’ படத்திற்காக சுருட்டு பிடித்த நளினி