த்ரிஷாவின் புதிய காதலன் யார்?

Read Time:2 Minute, 12 Second

005த்ரிஷாவின் புதிய காதலன் யார் என்று கோலிவுட்டில் பரபரப்பு கிசுகிசு எழுந்துள்ளது. தமிழில் த்ரிஷா நடித்து சமீபத்தில் திரைக்கு வந்தது என்றென்றும் புன்னகை படம்.

தற்போது தமிழில் பூலோகம் என்ற படத்திலும் தெலுங்கில் 2, கன்னடத்தில் 1 படமும் நடித்து வருகிறார். கடந்த ஓரிரு ஆண்டுகளாக டோலிவுட் ஹீரோ ராணாவுக்கும், த்ரிஷாவுக்கும் காதல் தீ பற்றிக் கொண்டது.

இருவரும் பொது இடங்களில் ஜோடியாக பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். திரைப்பட விருது விழாக்களில் லவ் ஜோடிபோல் கைகோர்த்து வந்தனர். இருவரும் காதலிக்கிறீர்களா என்று கேட்டால் நாங்கள் நண்பர்கள் என்று பூசிமெழுகினார்கள்.

இதெல்லாம் பழங்கதையாகிவிட்டது. சமீபகாலமாக இருவருக்கும் லடாய் ஏற்பட்டுள்ளதாம். அடிக்கடி செல்போனில் மணிக்கணக்கில் பேசிக்கொள்ளும் இருவரும் சமீபகாலமாக அதை தவிர்த்துவிட்டார்கள்.

கைகோர்த்தபடி ஜோடிபோட்டு பொது நிகழ்ச்சிகளுக்கு வருவதையும் நிறுத்திவிட்டனர். ராணாவுடன் மற்றொரு பிரபல நடிகையின் பெயர் இணைத்து சமீபகாலமாக வரும் கிசுகிசுவே த்ரிஷாவின் இந்த கோபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் பேட்டி அளித்த த்ரிஷா, விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தெரிவித்தார். எப்படியும் த்ரிஷா காதல் திருமணம்தான் செய்வார் என்று கூறப்படுகிறது. அவரது புதிய காதலன் யார் என்று இப்போது திரையுலகினர் கேட்க ஆரம்பித்திருக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ். ஆவா குழுவினருக்கு 31வரை விளக்கமறியல்
Next post கட்டுக்கட்டாக 13 கோடி ரூபாயை தெருவில் அடுக்கி வினியோகம்