ரஷ்யாவின் ‘நீண்டகால் அழகி’ பட்டத்தை வென்ற இளம் பெண் சட்டத்தரணி

Read Time:1 Minute, 41 Second

37521ரஷ்யாவின் மிக நீண்ட கால்களைக் கொண்ட யுவதியாக சைபீரியாவைச் சேர்ந்த 18 வயதான இளம் பெண் சட்டத்தரணி ஒருவர் தெரிவாகியுள்ளார்.

106 செ.மீ. நீளமான கால்களைக்கொண்ட அனஸ்டா ஸ்ராஸெவ்ஸ்கயா என்ற பயிற்சிப்பெறும் பெண் சட்டத்தரணியே Russia’s Miss Longest Legs பட்டத்தை வென்றுள்ளார்.

ரஷ்யாவின் தேசிய தேசிய அழகுராணிப் போட்டியில் நீண்ட கால்களைக்கொண்ட யுவதியை தெரிவு செய்வதற்காக இணையத்தளத்தில் வாக்கெடுப்பொன்று நடத்தப்பட்டுள்ளது.

இதில் மொத்தமாக போட்டியிட்ட 53 பேரில் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற அனஸ்டா பட்டத்தை தனதாக்கிக்கொண்டதுடன் சுமார் 3.5 இலட்சம் ரூபா பரிசையும் வென்றுள்ளார்.

இதனால் திடீரென பிரபல்மாகியுள்ள அனஸ்டா கூறுகையில், ‘சிறு வயதிலிருந்து நான் ஒரு சட்டத்தரணியாக ஆசைப்பட்டேன். எனவே மொடலிங் வாய்ப்புக்களால் சட்டக் கற்கையை கைவிடமாட்டேன்.

வெற்றி பெற்றுள்ள பணத்தினை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் எனது தாய்க்கு பரிசு வாங்கவும் திட்டமிட்டுள்ளேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போலி மாணிக்க கல் விற்ற நபரை தேடி பொலிஸ் வலைவீச்சு
Next post யாழ். கரவெட்டியில் பெண்ணின் மார்பை வெட்டியவர் கைது