நிமோனியாவால் இறந்த 12 வயது சிறுமி எழுதிய நெஞ்சை உலுக்கும் கடிதம்

Read Time:2 Minute, 3 Second

0b070235-c9a9-4bc5-b009-5d4fb1861d34_S_secvpfபிரிட்டன் நாட்டில் உள்ள டென்னஸ்சி பகுதியில் வசித்து வரும் டிம் ஸ்மித்தின் மகள் டெய்லர் ஸ்கவுட் ஸ்மித். 12 வயது நிரம்பிய இச்சிறுமி கடந்த ஞாயிரன்று நிமோனியா காய்ச்சலால் இறந்துவிட்டார்.

அவரது அறையை பெற்றோர்கள் சுத்தம் செய்தபோது அச்சிறுமி தனக்கு தானே எழுதிய கடிதம், அவளது பெற்றோர்களை மட்டுமல்லாமல் அந்நாட்டு மக்களின் நெஞ்சையும் உலுக்கும் படி செய்துவிட்டது. 10 வருடங்கள் கழித்து தனக்கே அக்கடிதம் வந்துசேரும் வகையில் அவர் எழுதியுள்ளதாவது:-

‘டியர் டெய்லர், வாழ்க்கை எப்படி உள்ளது. தற்போது வாழ்க்கை சாதாரணமாக உள்ளது(அதாவது 10 வருடங்களுக்கு முன்). நான் இக்கடிதத்தை முன்னரே எழுதிவிட்டாலும், தாமதமாகத்தான் உன்னிடம் அது வந்திருப்பது எனக்கு தெரியும்.

பள்ளி படிப்பில் பட்டம் பெற்றதற்கு வாழ்த்துக்கள். இதுவரை பட்டம் பெறவில்லையெனில் அதற்கு மீண்டும் முயற்சி செய். பட்டத்தை பெற்றுவிடு. நீ கல்லூரியில் இருக்கிறாயா. அப்படி இல்லையென்றால் அதற்கு நல்ல காரணம் இருக்கும் என நம்புகிறேன்.

இப்படி நெஞ்சை உலுக்கும்படி அமைந்துள்ள இக்கடிதம் இன்னும் நீண்டுகொண்டே போகின்றது. ஆனால் இதை எழுதிய அந்த சிறுமி தற்போது உலகத்தில் இல்லை என்பது அவர்கள் பெற்றோர்களுக்கு மட்டுமல்ல, இக்கடிதத்தை படிக்கும் நமக்கும் தான் துக்கத்தை தருகிறது என்று சொன்னால் அது மிகையல்ல.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வயல்வெளியிலிருந்து சிசு மீட்பு
Next post சிறையில் அடைக்கப்பட்ட கணவரின் உயிரணுவை கடத்தி குழந்தை பெற்ற பெண்