பிரான்ஸ் அதிபருக்கு நடிகையுடன் தொடர்பு
பிரான்ஸ் நாட்டு அதிபர் பிராங்காய் ஹோலந்து (59).இவர் ஏற்கனவே 2 தடவை திருமணம் ஆனவர்.4 குழந்தைகள் உள்ளனர்.
இருந்தும் தற்போது பத்திரிகையாளர் வாலெரி ட்ரீயர் வெய்லருடன் வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில், அதிபர் ஹோலாந்துக்கு பிரான்சின் பிரபல நடிகை ஜுலி கெய்ட் என்பவருடன் தொடர்பு இருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.
அதிபருக்கு இவருடன் தொடர்பு இருப்பதாக சமீபத்தில் வதந்திகள் பரவி வந்தன. இந்த நிலையில் இதை உறுதி செய்யும் வகையில் பிரான்சில் இருந்து வெளிவரும் க்ளோசர் என்ற வார பத்திரிகை 7 பக்கத்துக்கு படத்துடன் சிறப்பு கட்டுரை வெளியிட்டுள்ளது.
பாரீஸ் நகரில் இரவு நேரத்தில் ஸ்கூட்டரில் சென்று பல முறை ஜுலியை இவர் சந்தித்துள்ளார். புத்தாண்டு பிறக்கும் இரவில் ஜுலியை தேடி சென்று சந்தித்து இருக்கும் செய்தி போட்டோக்களுடன் வெளியாகி உள்ளது. ஆனால் அப்படங்கள் தெளிவாக இல்லை.
கடந்த 2012–ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது ஹோலாந்துக்கு நடிகை ஜுலி கெயட் அறிமுகம் ஆனார். அதில் இருந்து அவர்களுக்குள் தொடர்பு ஏற்பட்டதாகவும் செய்தியில் கூறப்பட்டுள்ளது. நடிகை ஜுலி கெய்ட் 2 குழந்தைகளுக்கு தாய் ஆவார்.
இவர் 50–க்கும் மேற்பட்ட சினிமா படங்கள் மற்றும் டி.வி. நிகழ்ச்சிகளில் நடித் துள்ளார். இதற்கிடையே, இச்செய்தியை வெளியிட்ட க்ளோசர் பத்திரிகை மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க போவதாக அதிபர் ஹோலந்து அறிவித்துள்ளார்.
இதை எனது தனிப்பட்ட வாழ்க்கை மீது நடத்தப்பட்ட தாக்குதலாக கருதுகிறேன். நாட்டில் உள்ள அனைத்து குடிமகன்களுக்கும் உள்ளது போல எனக்கும் அந்தரங்க வாழ்க்கைக்கு உரிமை உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating