வெனிசுலா அழகி கொலை வழக்கில் கேமரா உதவியுடன் சிக்கிய கொலையாளிகள்

Read Time:2 Minute, 5 Second

50d-dcd8-46a8-85df-9791e559ea44_S_secvpfவெனிசுலா நாட்டின் அழகியாக கடந்த 2004-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர் மோனிகா ஸ்பியர் (29). இவர் தனது முன்னாள் கணவர் ஹென்ரி பெர்ரி (39) மற்றும் அவர்களது 5 வயது குழந்தையுடன் வெனிசுலாவில் ஓய்வெடுக்க வந்திருந்தனர்.

சம்பவத்தன்று அவர்கள் மத்திய வெனிசுலாவில் உள்ள பியூர்ட்டோ காபெல்லோ மற்றும் வேலன்சியா நகருக்கிடையே நெடுஞ்சாலையில் காரில் வந்தபோது அவர்களை கொள்ளைக் கும்பல் சுட்டுக் கொன்றது. அவர்களது 5 வயது குழந்தை மட்டும் காலில் குண்டு காயத்துடன் உயிர் பிழைத்தது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர். அவர்களில் ஒருவன் வீட்டில் நடத்திய சோதனையில், மோனிகாவிடம் இருந்து திருடிச் சென்ற டிஜிட்டல் கேமரா கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த கேமராவை போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் இருந்த காட்சிகளை பரிசோதித்து பார்த்த போது, கொலையாளிகளைப் பற்றிய முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம் 11 பேர் கொண்ட கும்பல் இந்த கொலையை செய்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த கும்பலின் தலைவன் டேனிலோ என்பதும் இதன்மூலம் தெரியவந்துள்ளது. கேமராவில் கிடைத்த பதிவுகள் மோனிகாவின் கொலை வழக்கில் முக்கிய திருப்பு முனையாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழில் ஆவா குழுவுடன் தொடர்புடையதாக கூறப்படும் பெண் ஆவாவின் காதலியா?
Next post யாழ். இரு மகள்களை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு விளக்கமறியல்