7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சந்தித்த நயன்தாரா –சிம்பு

Read Time:3 Minute, 1 Second

33567322-4fdb-4ff6-8bf7-543edd6cfa1e_S_secvpfநயன்தாராவும் சிம்புவும் 7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சந்தித்தார்கள். பாண்டிராஜ் இயக்கும் படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது.

சில தினங்களுக்கு முன் சிம்பு நடித்த காட்சிகள் மட்டும் படமானது. அப்போது நயன்தாரா ஐதராபாத்தில் வேறு படப்பிடிப்பில் இருந்தார். தற்போது நயன்தாரா மற்ற படவேலைகளை முடித்து விட்டு வந்துள்ளார். அவர் நடித்த காட்சிகளை சென்னையில் இரு தினங்களாக பாண்டிராஜ் படமாக்கினார்.

சிம்பு வெளிநாட்டில் இருந்து நேற்று சென்னை திரும்பினார். இன்று நயன்தாராவும் சிம்புவும் சேர்ந்து நடித்த காட்சிகளை பாண்டிராஜ் படமாக்கினார். இருவரும் 7 வருடங்களுக்கு பிறகு சேர்ந்து நடித்தார்கள்.

படப்பிடிப்பில் இருவரும் ஒருவரையொருவர் நலம் விசாரித்து கொண்டார்கள். தொடர்ந்து சில நாட்கள் இருவர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகிறது. 2006–ல் ‘வல்லவன்’ படப்பிடிப்பில் நடித்தபோது நயன்தாராவுக்கும் சிம்புவுக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் தீவிரமாக காதலித்தனர். திருமணம் செய்து கொள்ளவும் முடிவெடுத்தார்கள்.

அப்போது திடீரென்று அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி பேட்டி அளித்துவிட்டு பிரிந்தார்கள். அதன் பிறகு நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. திருமணத்துக்கும் தயாரானார்கள். இதற்காக நயன்தாரா கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்துவாக மதம் மாறினார். கடைசி நேரத்தில் இந்த காதலும் முறிந்தது.

இதையடுத்து நயன்தாரா, மீண்டும் நடிக்க வந்துள்ளார். சமீபத்தில் அவர் நடிப்பில் ரிலீசான ‘ஆரம்பம்’, ‘ராஜாராணி’ படங்கள் வெற்றிகரமாக ஓடின. ‘அனாமிகா’, ‘இது கதிர்வேலன் காதல்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். தற்போது பாண்டிராஜ் படத்திலும் சிம்பு ஜோடியாகியுள்ளார். ஜெயம் ராஜா இயக்கும் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இங்கிலாந்தில் ரூ.18 லட்சம் மதிப்புள்ள திருமண மோதிரத்தை விழுங்கிய நாய்
Next post ஹலால் பௌத்த இனத்தவருக்கு ஹராமாகும் : பொதுபல சேனா